ரேகாவை ப்ளான் செய்து தூக்கிய முத்து - மீனா… அடுத்து என்ன கல்யாணம் தானா?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய பரபரப்பான எபிசோட்டின் சுவாரஸ்ய தொகுப்புகள்
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 

ரேகா முத்துவின் ப்ளான் படி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். இதனால் அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து விடுகின்றனர். பின்னர் திட்டம் போட்ட முத்து வேனில் அந்த மருத்துவமனைக்கு மீனா, சத்யாவுடன் வருகின்றனர். 

மீனா டாக்டர் வேடத்தில் வந்து இருக்கிறார். அங்கிருப்பவர் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்க அதை ஒருவழியாக சமாளித்து ரேகா இருக்கும் அறை வரை சென்று விடுகின்றனர். பின்னர் அங்கு வாசலில் இருக்கும் ரவுடிகள் கேள்வியாக கேட்கின்றனர். 

அவரை சமாளிக்க இங்கிலீஷில் டயலாக் போட்டு சீன் போட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்கள். பின்னர் ரேகாவிடம் பேசிவிட்டு வெளியில் வரும் போது கண்ணில் மயக்க மருந்தை தெளித்துவிட்டு ரவுடிகளிடம் இருந்து தப்பித்து வந்து விடுகின்றனர். 

அந்த நேரத்தில் ரேகா அப்பா வர அவரையும் ஏமாற்றி சரியாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். பின்னர் ரேகாவை அழைத்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு வருகின்றனர். பிரச்சனை எல்லாம் சரியானவுடன் வருவதாக சொல்லி விடுகிறார் முத்து. 

இனிமேல் சிந்தாமணி இந்த பிரச்சனையில் என்ன செய்ய போகிறார். அடுத்து இவர்கள் திருமணம் நடக்கும் என்ற பரபரப்பான கேள்விகள் ரசிகர்கள் எழுந்து இருக்கிறது. இதிலாவது டிஆர்பியை சிறகடிக்க ஆசை காப்பாத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

From Around the web