முத்துவுக்கு செக் வைக்கும் சிந்தாமணி… அடித்து ஆட ரெடியா?!!

சிறகடிக்க ஆசை தொடரின் இந்த வார இறுதிக்கு வந்துவிட்டது. அடுத்த வாரம் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்களை எதிர்பார்க்கலாம். 

 
siragadikka aasai

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்டில் காப்பாற்றப்பட்டு இருக்கும் ரேகா மற்றும் சத்யாவின் திருமணம் எப்படி நடக்கும் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

ஸ்வேதாவின் ஆங்கில வகுப்பில் எல்லாரும் இந்த வீரதீர செயல் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் மிஸ்ராவுக்கு ஸ்வேதா மீது கவனம் திரும்புகிறது. இதை முத்துவும் கவனித்து கொண்டு இருக்கிறார். 

இதனால் விரைவில் இவர்களின் லவ் டிராக் ஆரம்பிக்கப்படலாம். வீட்டில் சிந்தாமணி முத்து, மீனாவை கைது செய்து விட்டால் எளிதாக ரேகாவை அழைத்து வந்து விடலாம் என ப்ளான் போடுகிறார். அதன் ஒரு படியாக போலீஸிடம் அதன் சிசிடிவி காட்சிகளை காட்டுகிறார். 

முத்து மீனாவின் முகம் தெரியவில்லை என்றாலும் அது அவர்கள் தான் என உறுதியாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த நேரம் ரேகாவின் வீடியோ வெளியாக இதை பார்க்கும் போலீஸார் இனி லீகலாக ஒன்னுமே செய்ய முடியாது. 

அவங்களை அரெஸ்ட் செய்தாலும் உங்க பொண்ணே வந்து சப்போர்ட்டா பேசுவாங்க எனக் கூறி செல்கின்றனர். சரியென தன்னுடைய ஆட்களை அழைத்து மீனா, முத்து, சத்யாவை ஃபாலோ செய்ய சொல்கிறார். எல்லார் பின்னாலும் சிந்தாமணி ஆட்கள் அழைந்து கொண்டு இருக்கின்றனர். 

அதே நேரத்தில் வக்கீலை பார்க்க வரும் விஜயா மனோஜ், ரோகிணி டைவர்ஸுக்கு சம்மதம் சொல்லி விட்டதாக சொல்ல வக்கீலே ஷாக் ஆகிவிடுகிறார். ரோகிணி அப்படி செய்யும் ஆள் இல்லையே இது எதோ இருக்கும் என நம்புகிறார். 

பின்னர் ரோகிணிக்கு கால் செய்து இதுகுறித்து விசாரிக்கிறார். அவரும் காசு ரெடியா எனக் கேட்க ரெடி செய்வாங்க. நீங்க சொன்னது உண்மையா எனக் கேட்க ரோகிணியும் அமைதியாக இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

From Around the web