காசை ரெடி செஞ்ச முத்து… காலி பண்ண ப்ளான் போட்ட ரோகிணி?

சிறகடிக்க ஆசை தொடரின் பரபரப்பான எபிசோட்கள் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. 
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

முத்துவின் பழைய ஓனர் சிபாரிசு செய்ய பைனான்சியர் பழைய கார்களை பார்த்துவிட்டு முத்துவின் கார் டாக்குமெண்ட்களை கொடுத்து விட்டு காசை வாங்கிக்கொள்ள சொல்கிறார். அதன்படி 10 லட்சத்தை வாங்கிக்கொண்டு வருகிறார் முத்து. 

வீட்டில் வந்து பெருமையாக காசை காட்டிக்கொண்டு இருக்கிறார். உடனே விஜயாவும் மனோஜுக்கு கால் செய்து சந்தோஷமாக நம்ம வீடு கிடைக்க போகுது முத்து காசை ரெடி செய்து விட்டதாக சொல்கிறார். மனோஜும் அப்பா என்னிடம் இனி காசு கேட்க மாட்டான்ல என சந்தோஷப்படுகிறார். 

அப்போ அங்கு வரும் ரோகிணி ஒரு விழா நடப்பதாகவும் அதில் ஜோடியாக கலந்து கொண்டால் விருது கிடைக்கும் எனச் சொல்கிறார். ஆனால் வீடு கிடைக்க போகும் நேரத்தில் நம்ம ஒன்ன இருந்தா அம்மா கோபப்படுவாங்க. 

ஒன்ன போக வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். பின்னர் ரோகிணி நீ என்கூட வந்தே ஆகணும் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். மனோஜும் குழப்பத்தில் இருக்கிறார். ரோகிணியை பார்க்க வரும் சிந்தாமணியை தனியாக அழைத்து பேசுகிறார். 

அந்த வீட்டை வாங்க முத்து காசை ரெடி செய்து விட்டான். எதாவது பண்ணி வாங்க விடாமல் பண்ணுங்க. நானும் மனோஜும் சமாதானம் ஆனதும் அவங்களுக்கு அந்த வீடு கிடைச்சா போதும் எனக் கூற சிந்தாமணியும் பைத்தியன் என நினைத்து கொண்டு உனக்காக இதை செய்வதாக சீன் போட்டு போகிறார். 


 

From Around the web