கிரிஷால் ரோகிணி எடுத்த திடீர் முடிவு… இது என்ன புது ஆட்டமா இருக்கு?
விஜய் தொலைக்காட்சியின் முதல் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் நிறைய ட்விஸ்ட்களை தாங்கி வந்து இருக்கிறது.
கிரிஷ் பள்ளியில் மூர்க்கமாக நடந்து கொண்டிருப்பதாக அவர் பாட்டி சொல்ல கோபத்தில் அவரை போட்டு திட்டுகிறார் ரோகிணி. யார்கிட்ட பொய் சொல்ல கத்துக்கிட்ட சொல்லுடா யார்கிட்ட கத்துக்கிட்ட சொல்லு என கத்துகிறார்.
கிரிஷும் அசராமல் உங்க கிட்டேந்து தான்மா என்கிறார். நான் என்ன உன்ன பொய் சொல்ல சொன்னேனா எனக் கேட்க ஆமா மனோஜ் டாடி வீட்டுல சொல்ல சொன்னீங்கள எனக் கேட்க ரோகிணி அதிர்ந்து விடுகிறார்.
வெளியில் வந்து விட அவர் அம்மா இப்போ தெரியுதா? அன்னைக்கே சொன்னேன்ல. கிரிஷ் வாழ்க்கையை பாரு. அவன் கஷ்டப்படுறான். வளர்ந்துட்டானு சொன்னேன்ல எனக் கூறுகிறார். ரோகிணியும் எதுவும் சொல்ல முடியாமல் வெளியில் வந்து கதறி அழுகிறார்.
நானே என் பையன் வாழ்க்கையை கெடுத்துட்டேன். இனிமே அவனுக்காகவே வாழ போறேன். அவனுக்காக எதையும் செய்வேன் என முடிவெடுக்கிறார். அதே நேரத்தில் சத்யா மற்றும் ரேகா கல்யாணம் பற்றி பேசிக்கொண்டு இருக்க அண்ணாமலை இந்த விஷயத்தை ரேகாவின் வீட்டில் சொல்ல சொல்கிறார்.
ஆனால் முத்து அவர்கள் பிரச்சனை செய்வாங்க அப்பா எனக் கூற இருந்தாலும் அவர்களுக்கு சொல்லாமல் இதை செய்வது சரியாக இருக்காது என்கிறார். விஜயாவும் சிந்தாமணி பொண்ணு வாழ்க்க நல்லா இருக்க கூடாது என்ற எண்ணத்தில் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க என்கிறார்.
பின்னர் முத்துவும் அண்ணாமலை சொல்வதே சரியெனப்பட இந்த திருமணம் குறித்து சிந்தாமணியிடம் சொல்ல சொல்கிறார். பின்னர் மீனாவும் முத்துவும் சிந்தாமணியை பார்க்க செல்கின்றனர். என்ன இங்க வந்து இருக்கீங்க பிரச்சனை செய்வதுக்கா வந்தீங்க எனத் திட்டுகிறார்.
இல்ல ரேகாவுக்கு கல்யாணம். வந்துடுங்க என்கிறார். அவளுக்கு பண்ணி வைக்க நீங்க யாரு? அதும் அந்த சத்யா இந்த வீட்டு மருமகனா என திட்ட முத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. வீடியோ பாத்திருப்பீங்களே. தேவையே இல்லாமல் பிரச்சனை செய்யாம வந்து வாழ்த்திட்டு போங்க எனச் சொல்லி செல்கின்றனர்.
