திருட்டு போன பணம்… முத்துவின் திடீர் முடிவால் நடக்க போகும் விபரீதம்!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி அந்த வீடு கிடைக்க கூடாது என சிந்தாமணியிடம் கூறுகிறார். இதை கேட்கும் அவர் அம்மா இதெல்லாம் சரியில்லை என்கிறார். ஆனால் ரோகிணி என்னிடம் கேள்வி கேட்காதீங்க. உங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்யுங்க என்கிறார்.
கிரிஷும் இதை பார்த்து வருத்தப்படுகிறார். பின்னர் மீனா வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது யாரோ பணத்தை திருடி செல்வது போல கனவு கண்டு அலறி எழுந்திருக்கிறார். இதை முத்துவிடம் சொல்ல நாம ஜாக்கிரதையா இருக்கணும் என திட்டம் போடுகின்றனர்.
பின்னர் முத்துவிடம் பணத்தை எடுக்க ஆள் செட் செய்து இருப்பதை பார்க்க கார் இல்லாமல் பைக்கில் சத்தமில்லாமல் சென்று விடுகிறார். மீனாவும் பைக்கில் போலி பணத்துடன் செல்ல அவர்கள் நினைத்தது போல ஆட்கள் மிரட்டி அதை எடுத்து சென்று விடுகின்றனர். மீனாவும் நடித்து விட்டு முத்துவிடம் நினைத்தது போல நடந்து விட்டதாக சொல்கிறார்.
முத்து பைனான்சியரிடம் காசு வாங்க காத்திருக்க காசை எடுத்து வந்த ஆள் போலீஸில் மாட்டி விட்டதாக சொல்கிறார். இதனால் முத்து காசை நானே வாங்கிக்கொண்டு செல்வதாக சொல்லிவிடுகிறார். இதற்குள் வீட்டில் ஏலம் தொடங்கிவிடுகிறது. அண்ணாமலை மற்றும் மீனா அங்கு காத்திருக்கின்றனர்
