Siragadikka Aasai: மீண்டும் அசிங்கப்படும் முத்து… திமிர் கூடும் அருண்… இனிமே சீதாவின் முடிவு என்னவாக இருக்குமோ?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
இன்ஸ்பெக்டர் வீட்டில் அவரை பார்த்து விட்டு வெளியில் வர மீனாவை அனுப்பி விட்டு தான் ஷெட்டுக்கு சென்று வருகிறேன் எனக் கூறுகிறார். மறுபக்கம் வீட்டில் மனோஜ் சாப்பிட்டு கொண்டு இருக்க விஜயா பரிமாறுகிறார். இப்படி லேட்டா போனா யார் கடையை பாத்துப்பா என்கிறார்.
ரோகிணி பார்த்துப்பா என வாய் குளறி மனோஜ் சொல்ல விஜயா என்ன சொன்ன எனக் கேட்டு சத்தம் போடுகிறார். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மறுக்க முடியாமல் போக ரோகிணி கடைக்கு வரும் விஷயத்தினை சொல்ல அவரை கண்டித்து வைக்கிறார் விஜயா.
மனோஜிடம் இருந்து எழுந்திருக்கும் விஜயா நேராக ரோகிணியிடம் வந்து கடைக்கு எதுக்கு போற எனக் கேட்க நான் போகலை ஆண்ட்டி என்கிறார். என் பையன் என்னிடம் பொய் சொல்லவே மாட்டான். நீ ஏன் இப்படி பொய் பொய்யா சொல்லிட்டு இருக்க எனக் கேட்கிறார்.
இனிமே நீ கடைக்கு போக கூடாது எனக் கூறி அவரை கண்டப்படி திட்டி விட்டு செல்கிறார். பின்னர், ரோகிணி மனோஜிடம் வந்து உங்க அம்மா இவ்வளோ திட்டுறாங்க நீ எதுவுமே சொல்லலையே எனக் கேட்க மனோஜ் பேசாமல் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.
ரோகிணி இனிமே இதை இப்படியே விடக்கூடாது. இல்லனா இவன் மொத்தமா அம்மா பிள்ளையா மாறிடுவான் என நினைக்கிறார். மறுபக்கம் ஷெட்டுக்கு வரும் முத்து நண்பர்களிடம் நடந்த விஷயங்களை கூறுகிறார். அவர்கள் குடிக்க சொல்லி வற்புறுத்த முத்துவும் குடித்து விடுகிறார்.
அருண் வீட்டில் சீதா இருக்க இருவரும் பேசிவிட்டு கோயில் கிளம்பலாம் என நினைக்கின்றனர். அவர்கள் கிளம்ப அருண் வீட்டிற்கு நண்பர்களுடன் ஆட்டோவில் சென்று இறங்க கல்லை கொண்டு அடித்து கத்திக்கொண்டு பிரச்னை செய்கின்றனர். இதை வீடியோ அருண் பதிவு செய்து விடுகிறார்.