புது பிசினஸ் தொடங்கும் முத்து… வொர்த்தா? வேஸ்ட்டா? என்ன நடக்குமோ?
சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.
ஒருநாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் கார் ஓட்டுவதாக சொல்ல அவருக்கு தெரிந்தவர் இப்படி வேலை செய்தால் நீ உழைச்சிக்கிட்டே தான் இருக்கணும். தெளிவா யோசிச்சா தான் நீ முன்னேற முடியும் என்கிறார். இதை முத்து யோசித்து கொண்டு இருக்கிறார்.
தன் கார் ஷெட்டில் இருக்கும் நண்பர்களுடன் இதை சொல்லி என்ன செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவருடைய பழைய ஓனரிடம் நிறைய கார்கள் ஓடாமல் சும்மா கிடப்பதாகவும் அதனை வைத்து பேசலாம் எனவும் ஐடியா கிடைக்கிறது.
உடனே அவரும் தன்னுடைய பழைய ஓனரை பார்த்து பேசிவிட்டு அவருடைய பழைய ஷெட்டை சென்று பார்க்கிறார். அங்கு பழைய கார்கள் பல ஆண்டுகளாக ஓடாமல் இருப்பதாக அவர் சொல்ல இதை ஓட வைத்துவிட்டால் லாபம் பார்க்கலாம் என்கிறார்.
அவரும் இதற்கெல்லாம் பெரிய செலவு ஆகுமே எனக் கேட்க அதை நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். இதுகுறித்து மீனாவிடம் சொல்ல அவர் இது பிரச்சனை ஆகிடுமா என சந்தேகப்பட அதெல்லாம் இல்ல. எல்லாம் நடக்கும் என முத்து தைரியமாக பேசுகிறார்.
பின்னர் சிந்தாமணி மற்றும் பைனான்சியர் இருவரும் வீட்டை ஏலம் விடுவது குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். சிந்தாமணி அந்த முத்து டிராவல்ஸ் நடத்த இருப்பதாக சொல்ல பைனான்சியர் அதெல்லாம் கடன் கட்ட முடியாது. அப்படி அவன் டிராவல்ஸ் ஓட்டினாலே 30 வருடம் ஆகும் என்கிறார்.
சிந்தாமணி ஏலம் விடும் போது அதில் கலந்து கொள்வது நம்ம ஆளுங்களாக தான் இருக்கும் என்கிறார். பைனான்சியரும் ஆமா செட் செய்துவிட்டேன் என்கிறார். இதனால் ஏலத்தில் எதுவும் ட்விஸ்ட் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
