Siragadikka Aasai: என்னங்கப்பா… வரிசையா உடையுது… ரோகிணிக்கு பெத்த ஆப்பு ரெடி செஞ்ச மீனா, முத்து…
Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
மலேசியாவில் இருந்து வந்திருக்கும் இருவர் முத்துவின் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிறந்தநாள் எனக் கூற பூஜை செய்வதற்காக கோயில் செல்ல முடிவெடுக்கின்றனர். முத்து, மீனாவுக்கு கால் செய்து பூஜைக்கான ஏற்பாட்டை செய்ய சொல்கிறார்.
சிட்டி கோயிலுக்கு வர அங்கு சத்யா இருப்பதை பார்த்துவிடுகிறார். சத்யா அக்காவும் கோயிலுக்குள் இருப்பதால் சிட்டி எதுவும் பிரச்னை செய்வார் எனக் கூறுகிறார். ஆனால் மீனாவின் அம்மா அவரை தடுத்து அவ பார்த்துக்குவா எனக் கூறுகிறார்.
கோயில் நிர்வாகியை அழைத்து சிசிடிவி வீடியோ குறித்து சிட்டி கேட்க அவர் நீங்க யாருன்னு தெரியாது உங்களுக்கு தர முடியாது எனக் குறிப்பிடுகிறார். தான் மீனாவின் குடும்ப நண்பர் தான் என சிட்டி கூற மீனாவும் வீடியோ கேட்டுச்சு நான் மாட்டேன் எனக் கூறிவிட்டதாக சொல்கிறார்.
அந்த கோயில் நிர்வாகி மீனாவை அழைத்து சிட்டி வந்த விஷயத்தை போட்டு கொடுத்து விடுகிறார். ( ரோகிணிக்கு வந்த முதல் ஆப்பு) இதைக் கேட்கும் மீனா சரியான அங்கிருந்து சென்று விடுகிறார். ஆனா சிட்டி வந்ததற்கு காரணம் ரோகிணி தான் என்பதையும் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
முத்து மலேசியாவில் இருந்து வந்தவர்களை அழைத்து வந்து பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். மீனா முத்துவிடம் சிட்டி வந்த விஷயத்தையும் ரோகிணி விஷயத்தையும் சேர்த்து கூறுகிறார். இதை அப்புறம் பேசிக்கலாம் என முத்து சென்று விடுகிறார்.
ரோகிணியை பார்க்கும் சிட்டி அந்த வீடியோ கிடைக்கவில்லை எனக் கூறி போலீசில் புகார் கொடுத்தால்தான் வீடியோ தருவார்கள் என்பதையும் கூறிவிட்டு செல்கிறார். ரோகிணி மனோஜ்க்கு கால் செய்து புகார் கொடுத்த இடத்தில் இது குறித்து பேச சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
டான்ஸ் கிளாஸிருக்கு வரும் விஜயா, ஈசிஆர் பக்கம் போகவில்லை உங்களை என்னால் விட்டுவிட்டு இருக்க முடியாது என சமாளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கிளாஸ் மாணவர்களிடம் ஏற்கனவே பார்வதி உளறி வைத்துவிட அவர்கள் விஜயாவை நக்கலாக சிரித்துக் கொண்டு பார்க்கின்றனர்.