முத்துவுக்கு டைம் கொடுத்த விஜயா… வசமாக சிக்கிய ரோகிணி!!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடந்த சுவாரஸ்ய தகவல்கள். அடுத்தக்கட்ட பரபரப்புக்கு சீரியல் தயாராகி வருகிறது.
ரோகிணியை கேமரா மூலம் கிழிகிழியென கிழிக்கும் விஜயா. இதில் கடுப்பான ரோகிணி உடனே கேமராவை உடைத்து விடுகிறார். அப்போதும் மனோஜ் அமைதியாக இருக்க அவரையும் திட்டிவிட்டு செல்கிறார்.
ரோகிணி கிரிஷை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்கிறார். அங்கு முத்து, மீனாவும் இருக்க என்னாச்சு ஏன் இங்க வந்துருக்க எனக் கேட்க அடிக்கடி தலைவலி எனக் கூறினான். அதான் டாக்டரை பார்க்க வந்தோம் என்கிறார் ரோகிணி.
ஏன் உனக்கு தலைவலி வருது எனக் கேட்க அம்மா பாட்டியோட சண்ட போடுறப்போ வரும். அப்புறம் மனோஜ் அப்பாவோட பேசுறப்போ வரும். அப்புறம் சிந்தாமணி பாட்டியோட பேசுறப்போ வரும் எனக் கூற ரோகிணி அதிர்ச்சியில் பார்க்கிறார்.
மீனா வீட்டில் விஜயா இருக்க அப்போ இரண்டு பேர் சந்திராவை தேடி வருகின்றனர். அப்போ விஜயா அவர் வெளியில் போய் இருப்பதாகவும் வருவார் எனக் கூறிவிட்டு ரூமுக்கு செல்கிறார். அந்த பெண்கள் விஜயா ரூமுக்குள் போனதும் இந்த அம்மா கொடுமைக்காரியாம்.
அந்த அக்கா மீனாவை இப்படி ஒரு இடத்தில் கட்டி கொடுத்துட்டேன் என புலம்பிட்டு இருந்துச்சு. இப்போ பாரு அவங்க வீடு இல்லாம இங்கையே வந்து தங்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு என்கிறார்கள். இதை கேட்ட விஜயா அவர்கள் போனதும் சண்டையை தொடங்கிவிடுகிறார்.
இப்படிதான் சொல்லிட்டு இருக்கீங்களா? நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன் என்கிறார். அப்போ மீனாவும் வர இவ ராஜினாமா செய்ய மாட்டிங்கிறா? நான் இங்க இருக்க மாட்டேன் எனக் கடுப்படிகிறார். பின்னர் மீனா நான் இப்போவே ராஜினாமா செய்கிறேன் எனக் கிளம்புகிறார்.
அவரை தடுக்கும் முத்து நான் இன்னும் ரெண்டு நாளில் வீட்டை மீட்கிறேன் எனக் கூற உன்னால முடியாது. நீ எப்படி செய்வ எனக் கேட்க நான் செய்வேன். அப்படி இல்லையென்றால் உடனே என்னுடைய வேன், காரை விற்று விடுகிறேன் என சவால் விடுகிறார்.
