Siragadikka Aasai: கைது செய்யப்படும் ரோகிணி… மனோஜுக்கு இந்த திமிரு மட்டும் குறையாதே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா முத்துவிடம் சொல்லிவிட்டு நேராக வீட்டுக்கு வந்து எல்லாரையும் அழைக்கிறார். ரோகிணியை கத்தி வெளியில் அழைக்க அவரும் வந்து என்ன விஷயம் எனக் கேட்கிறார். என் புருஷனை அரெஸ்ட் செஞ்சப்ப அமைதியா இருந்தீங்க.
உங்களுக்கு இதெல்லாம் தப்பா தெரியலை என மீனா பேசிக்கொண்டே இருக்கிறார். ரோகிணி என்ன விஷயம்னு மொதலில் சொல்லுங்க எனக் கேட்க தீபன் வீட்டு ஆளுங்களை அடிக்க ஆள் அனுப்புனது இந்த ரோகிணிதான் என்கிறார்.
இதில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைய மனோஜ் என்ன உன் புருஷனை காப்பாத்த என் பொண்டாட்டி மேல பழியை போடுறீயா என்கிறார். இந்த பழக்கம் எங்களுக்கு கிடையாது என்கிறார் மீனா. விஜயா இவ ஃப்ராடு தான். அந்த லெவலுக்கு போவாளா எனக் கேட்கிறார்.

ஆமாம் எனக் கூறும் மீனா தீபன் வீட்டு ஆளுங்களை அடிச்சது அந்த சிட்டிதான். ரவி, முத்துவிடம் பிரச்னை செய்வானே அவனா எனக் கேட்க ஆமாம். ஆனா அவனை அனுப்பினது நம்ம வீட்டு ஆள் என ரோகிணியை கை காட்டுகிறார். மனோஜ் என்ன பொய் சொல்றீயா என்கிறார்.
எங்களுக்கு பொய் சொல்லி பழக்கமே இல்ல. எங்களுக்கு அது தெரியவும் செய்யாது என்கிறார் மீனா. உடனே ரோகிணி இதற்கு ஆதாரம் இருக்கா எனக் கேட்க இப்போ வர வேண்டியவங்க வருவாங்க. அவங்க வந்து சொல்லுவாங்க எனக் கூறி விடுகிறார்.
சரியாக போலீஸ் வந்து ரோகிணியை கேட்க என்ன விஷயம் என்கிறார் விஜயா. சிட்டியை அரெஸ்ட் செய்து அழைத்து வந்து அவனிடம் கேட்ட விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ரோகிணியிடம் நீ சிட்டியை பார்த்தியா என்கிறார் அண்ணாமலை.
நான் அவனை பார்த்து பேசி சரி பண்ணத்தான் சொன்னேன். ஆனால் யாரையும் அடிக்க சொல்லலை என்கிறார். ரவி, அந்த ஆளுங்க முத்து பேரை சொல்லி அடிச்சதா தானே சொன்னாங்க. அப்போ ரோகிணி இதுவும் உங்க வேலைதானா எனக் கேட்கிறார் ஸ்ருதி.
ரோகிணி நான் அடிக்க சொல்லலை எனக் கூற அண்ணாமலை ஒரு ரவுடி கூட உனக்கு என்ன பழக்கம்? கடந்த முறை இனி பொய்யே சொல்ல மாட்டேனு அடிச்சு சத்தியம் செஞ்ச இதான் நீ சத்தியத்தை காப்பாத்துற லட்சணமா எனக் கத்துகிறார்.
உன்னால் முத்துவை அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போனாங்க. அப்போ கூட உண்மையை சொல்லவே இல்ல என்கிறார். போலீஸார் ரோகிணி அழைத்து செல்ல வேண்டும் எனக் கூற மனோஜ் வேண்டாம் என கெஞ்சுகிறார். எதா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கோங்க எனக் கூறி அழைத்து செல்கிறார்.
அண்ணாமலை மனோஜை போக சொல்ல அவர் ரோகிணியை தானே கூப்பிட்டாங்க என்கிறார். ரவி டேய் அது உன் வொய்ஃப் போ எனத் திட்டி அனுப்ப மனோஜும் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷன் வர ரோகிணி உள்ளே வரும் போதே சிட்டியை மனதில் திட்டிக்கொள்கிறார்.
என்ன பார்லர் அம்மா இப்படி இறங்கிட்ட எனக் கேட்கிறார் முத்து. போலீஸ் ஏம்மா இப்படி ஆளை வச்சி அடிக்க சொல்றதுக்கு என்ன அவசியம். எனக் கேட்க நான் எதுவுமே செய்யலை சார். அவங்களிடம் பேச தான் சொன்னேன் என்கிறார். முத்துவை போலீஸ் கிளம்ப சொல்ல ரோகிணி, மனோஜ் கெஞ்சிக்கொண்டே இருக்கின்றனர்.