Siragadikka aasai: அதானா விஜயா திருந்த வாய்ப்பே இல்லை… அரெஸ்ட்டான முத்துவிற்காக மீனா செய்த சம்பவம்!

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
அண்ணாமலை வீட்டிற்கு போலீசார் வந்து முத்துவை கைது செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். என்ன விஷயம் என கேட்க தீபன் வீட்டினரை அடித்த காரணத்திற்காக அவரை கைது செய்வதாக சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
மீனா மற்றும் அண்ணாமலை இருவரும் முத்துவிற்கு ஆதரவாக பேச விஜயா இவன் செஞ்சு இருப்பான் என முத்துவிற்கு எதிராக பேசுகிறார். ஒரு கட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் முத்துவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். அண்ணாமலை வரேன் என்று சொல்ல முத்து மறுத்து விடுகிறார்.

முத்துவை கைது செய்து அழைத்து செல்ல மீனா அவருக்கு தெரிந்த போலீஸ் வீட்டுக்கு செல்கிறார். முத்துவை காவல்நிலையத்துக்குள் அழைத்து செல்ல அங்கு அருண் இருக்கிறார். இவரை எதுக்கு அழைத்துட்டு வந்தீங்க சார் எனக் கேட்க இன்ஸ்பெக்டர் விஷயத்தை சொல்கிறார்.
அருண் அவர் வெறும் டிரைவர், அவங்க மனைவி பூக்கட்டுறவங்க எனச் சொல்ல முத்து கடுப்பாகி திட்டுகிறார். இப்படி சொல்லாதீங்க எனச் சொல்ல முத்துவை ஜெயிலில் அடைத்து விடுகிறார். வெளியில் வரும் அருண் இன்ஸ்பெக்டரிடம் நான் சும்மாதான் சொன்னேன். அவர் இப்படி தான் செய்கிறார்.
ஜெயிலில் அடைச்சு வச்சா கொஞ்சம் திருந்துவாரு எனச் சொல்லுகிறார். மீனா அந்த போலீஸ் வீட்டுக்கு செல்ல அங்கு ஆள் இல்லை எனக் கூறிவிடுகிறார். பின்னர் அருணிடம் உதவி கேட்க போக அருணின் அம்மா உங்க புருஷன் ஏன் இப்படியே செய்வதாக கேட்கிறார்.
சீதா அருணிடம் எங்க மாமாக்கு உதவி செய்யுங்க என்கிறார். அருணும் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா அடிப்பட்டவங்க ரொம்ப சீரியஸா இருக்காங்க. ஒருத்தர் உயிர் போற நிலைல இருப்பதாக சொல்கிறார். அவர் இறந்துவிட்டால் இன்னும் பிரச்னை ஆகும் என்கிறார். அருண் சமாதானமாக பேச மீனா கிளம்பிவிடுகிறார். வெளியில் வரும் சீதா, மீனாவிடம் அருணை விசாரிக்க சொல்கிறேன். நீ எங்க போற எனக் கேட்க நான் சும்மா இருக்க முடியாதே. அதான் வேற வழி இருக்கானு பார்க்க போவதாக சொல்கிறார்.
ஆனால் அருண் உள்ளே வில்லங்கமாக சிரித்து கொள்கிறார். ரதியை பார்க்கும் மீனா, முத்துவிற்கு உதவி கேட்கிறார். அவர் ஏன் அங்கே போனாரு எனக் கேட்க காசு கேட்டு மிரட்டினாங்க. அதை கேட்க தான் போனார். ஆனால் ஆள் வைத்து அடிக்கவே மாட்டார். தேவைப்பட்டா அவர் தானே அடித்துவிட்டு வருவார் என்கிறார். ரதியிடம் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்க அவர் தீபனுக்கு கால் செய்து பேசு என்கிறார். அவரிடம் நீங்க எதுக்கு கால் பண்ணி இருக்கீங்க என மீனாவிடம் கேட்க வந்தவங்களை உனக்கு தெரியுமா எனக் கேட்க தெரியாது. ஆனா வெளியில் சென்று சிட்டி வேலை முடிந்துவிட்டதாக சொன்னதாக சொல்கிறார்.
உடனே மீனாவுக்கு விஷயம் புரிந்து விட தனக்கு தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை சொல்ல அவர் கால் செய்து முத்துவை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிடுகிறார். அருண் கூட அவருக்கு சப்போர்ட் செய்தார் எனக் கூற அது வீட்டு பிரச்னை அவருக்கும், முத்துவிற்கும் ஆகாது என்கிறார்.
மீனா வர அவரும் இன்ஸ்பெக்டர் விஷயத்தை சொன்னதாக சொல்கிறார். உடனே சிட்டியை அரெஸ்ட் செய்து அழைத்து வரச்சொல்லுகிறார். அவரை அடித்து கேள்வி கேட்க அவர் ரோகிணியின் பெயரை சொல்ல முத்து மற்றும் மீனா அதிர்ச்சியாகி விடுகின்றனர்.