
latest news
Siragadikka Aasai: காணாமல் போன கிரிஷின் பாட்டி… தேடி திரியும் முத்து… …
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
ரோகிணியின் அம்மா விஷயத்தை வீட்டில் சொல்லிவிட கேட்கிறார். இதில் கடுப்பாகும் ரோகிணி அந்த விஷயத்தை சொன்னால் என் வாழ்க்கை என்ன ஆகிறது என கேட்கிறார். ஆனால் கிரிஷ் அங்கு இருப்பதற்கு தான் சந்தோஷப்படுகிறான்.
மேலும் எரிச்சல் ஆகும் ரோகிணி இந்த விஷயத்தை சொன்னால் நானே அந்த வீட்டில் இருக்க முடியாது. அவனை கொண்டு வந்து இந்த ஹாஸ்பிடல்ல பத்து நாள் இருக்க வைத்தால், டாக்டர், நர்ஸ்லாம் ரொம்ப பிடிச்சிட்டுனு தான் சொல்லுவான் என்கிறார்.
கையில் கொஞ்சம் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகுற வழிய பாரு என சென்று விடுகிறார். அடுத்த நாள் காலை கிரிஷை ரெடி செய்து முத்து மற்றும் மீனா மருத்துவமனைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். கிரிஷுக்கு அண்ணாமலை திருக்குறளை பரிசாக கொடுக்கிறார்.

ரவி, ஸ்ருதி கிப்ட் கொடுக்க ரோகிணிக்கு மட்டும் கிரிஷ் முத்தம் தர விஜயா அதிர்ச்சியாக பார்க்கிறார். அவரை சமாளிக்க அவருக்கும் முத்தம் தருகிறார் கிரிஷ். பின்னர் மருத்துவமனை செல்ல அதே நேரத்தில் அங்கு ரோகிணியும் வர மறைந்து கொள்கிறார்.
ரூமிற்குள் செல்ல அங்கு ரோகிணியின் அம்மா இல்லாமல் இருக்கிறார். உடனே ரிசப்ஷன் சென்று கேட்க அவர் பணத்தை கட்டி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக சொல்லி விடுகின்றனர். இதை கேட்கும் ரோகிணியும் அதிர்ச்சியில் நிற்கிறார். மருத்துவமனை முழுவதும் தேடியும் ஆள் கிடைக்காமல் கிரிஷை வீட்டிற்கு அழைத்து வர முடிவெடுக்கின்றனர்.
முத்து அங்கிருக்கும் வாட்பாயிற்கு இருக்கு காசு கொடுத்து சிசிடிவியை செக் செய்ய அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் போவது மட்டும் தெரிந்துவிடுவதாக சொல்கிறார். எதிரில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் விசாரிக்க அங்கு தகவல் இல்லாமல் போகிறது.
இதற்கிடையில் ரோகிணி தன்னுடைய ஷோரூமில் கவலையாக அமர்ந்து இருக்க அவரின் சித்தியிடம் கால் செய்து விசாரிக்க தகவல் இல்லை என்கின்றனர். இந்த நேரத்தில் கடை பையன் தன் பாட்டி இறந்துவிட்டதாக லீவ் கேட்கிறார். என்ன ஆச்சு என்கிறார் மனோஜ்.
நல்லாதான் இருந்தாங்க. திடீரென காணாமல் போய்ட்டாங்க. நாங்களும் தேடினோம். கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்ல ரோகிணி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் கிரிஷ் மீண்டும் வந்ததற்கு விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார். அம்மா பாரீன் ஓடி போய்ட்டா, பாட்டி நம்ம தலையில் கட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டா எனவும் திட்டுகிறார்.