Siragadikka Aasai: விஜயாவின் திடீர் பல்டி… டாக்டர் பட்டத்துக்காக இம்புட்டு பொய்யா? இது என்ன புது சம்பவமோ?

by Akhilan |
Siragadikka Aasai: விஜயாவின் திடீர் பல்டி… டாக்டர் பட்டத்துக்காக இம்புட்டு பொய்யா? இது என்ன புது சம்பவமோ?
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

ரோகிணி வீட்டிற்கு வந்துவிட முத்து இந்த பிரச்சனை தொடங்கியதற்கு காரணமே அம்மா தான் என்கிறார். இதில் விஜயா கடுப்பாகி நான் என்ன செய்தேன் என கேட்கிறார். நான் இவ மேல பாசமா இருந்தேன் எனக் கூற அது மலேசிய மருமகளுக்கு கிடைச்ச மரியாதை.

பணம் இல்லனு தெரிஞ்சது பாசமும் போச்சு என்கிறார். மீனா டான்ஸ் கிளாஸ் நடந்த விவாகரத்தை சொன்னப்போ அப்போ நீ கண்டிச்சு இருக்கலாம். இல்ல வராதீங்கனு சொல்லி இருக்கலாம் என அண்ணாமலை கூறுகிறார். ரவியும் நீங்க அப்போ சொல்லி இருந்தா இந்த பிரச்னையே இல்லை என்கிறார்.

உடனே முத்து, டான்ஸ் கிளாஸ் நடத்துனது இவங்க. பணம் ஐடியா கொடுத்தது அந்த ஓடுகாலி, ஆள் வச்சு அடிச்சது இந்த பார்லர் அம்மா. ஆனா ஜெயிலுக்கு போனது நானு. என் பொண்டாட்டி கடைசியில் என்னை வெளியில் எடுக்க அழைய வேண்டி இருந்தது என்கிறார்.

விஜயா எனக்கு தெரிஞ்ச கலையை நான் சொல்லி தர நினைச்சது தப்பா எனக் கேட்க இருந்தாலும் நீ கவனமா இருந்து இருக்கணும் என்கிறார். பின்னர் ரோகிணியிடம் இனிமே இப்படி தப்பு செய்யாத எனச் சொல்லி செல்கிறார். இதில் கடுப்பாகி விடுகிறார் விஜயா. பின்னர் இரவு முழுச்சி உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என அண்ணாமலை கேட்கிறார்.

நீங்க பேசுனதை ஜீரணிச்சிக்க முடியலை என்கிறார். அவ அடியாளை வச்சு மிரட்டுனது எனக்கு என்ன சம்மந்தம்? நான் ஏன் இங்க இருக்கணும்? எங்கையாது போறேன் என்கிறார். நீ உன் பசங்களை உன் குடும்பமா நினைச்சா பேசுனது தப்பா தெரியாது.

எனக்கு நெஞ்சு வலி வர வச்சிடாதே. பெருமைப்படுற மாதிரி எதுவும் செய் என்கிறார். அடுத்தநாள் காலை மனோஜ் ஷோரூமில் இன்ஸ்டால்மெண்ட் வாங்கிவிட்டு பொருள் கொடுக்கும் திட்டத்தை தொடங்க அமோக கூட்டம் வந்து 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்து விடுகிறது.

இதற்கு ராஜா, ராணி இன்னும் செய்யலாம் என மனோஜை ஏத்திவிடுகின்றனர். பின்னர் விஜயா மற்றும் பார்வதி கோயிலுக்கு வந்திருக்க அடுத்த என்ன கிளாஸை தொடங்கலாம் என விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ பார்வதியின் தோழி ஒருவர் சமூக சேவை செய்றவங்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கி தந்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்.

விஜயாவும் தான் சமூக சேவை செய்வதாக பில்டப் செய்து மீனாவை தானே கட்டி வைத்தது போலவும், கிரிஷை படிக்க வைப்பது போலவும் பில்டப் செய்கிறார். ஆனால் இதற்கு வீடியோ ஆதாரம் வேண்டுமே எனக் கேட்க இனிமே என்ன செஞ்சாலும் ஆதாரம் வச்சிக்கோங்க எனச் சொல்லி செல்கிறார்.

Next Story