Siragadikka Aasai: திடீரென பாசமாக பேசி ஆக்டிங்கை போட்ட விஜயா… குடும்பத்துகே மயக்கம் வருதாம்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
விஜயா நகை எல்லாம் போட்டு ரெடியா இருக்க அண்ணாமலை என்ன விஷயம் என கேட்க அவரிடம் எதுவும் சொல்லாமல் சமாளித்து விடுகிறார். பின்னர் பார்வதி வர அவர் டாக்டர் என உளர பார்க்க அவர் வாயை விஜயா அடைத்து விடுகிறார்.
பின்னர் அண்ணாமலை சென்றதும் பார்வதியை தனியாக அழைக்கும் விஜயா டாக்டர் பட்டம் வரும் வரை இதை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறுகிறார். சரி வேலையை ஆரம்பிப்போம் என பார்வதி ரெக்கார்ட் செய்ய விஜயா திடீரென மீனாவை அழைத்து தன் பக்கத்தில் அமர சொல்கிறார்.
குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக அதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உடனே மீனாவை கொஞ்சம் விஜயா ஒரு புது புடவையை எடுத்து அவரிடம் கொடுக்கிறார். இதில் முத்து மயக்கம் வராத குறையாக ரவிடம் கேட்க எனக்கே இது கனவு மாறி தான் தெரியுது என ஸ்ருதியை கிள்ளி பார்க்கிறார்.

இதை பார்க்கும் ரோகிணி பொறாமை பொங்கி கொண்டு இருக்கிறார். ஒரு பை முழுவதும் புடவையை கொடுத்து இதை உன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு கொடு எனவும் சொல்கிறார். எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க வீடியோ முடிந்ததும் அந்த புடவை கொண்ட போய் ரூமில் வைத்து விடு என மீனாவிடம் சொல்ல எல்லோரும் அதிர்ந்து பார்க்கின்றனர்.
முத்து கடுப்பாகி இங்கு என்ன நடக்குது எனக் கேட்கிறார். பார்வதி சொல்ல பார்க்க நம்ம அடுத்த விஷயத்திற்கு போவோம் என அவரை அடக்குகிறார் விஜயா. அடுத்து என்ன என்ன எல்லோரும் கேள்வியாக பார்க்க கிருஷை அழைத்து வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார் விஜயா.
எல்லோரும் ஒன்று புரியாமல் இருக்க இந்த வீடியோவையும் முடித்துக் கொண்டு விஜயா நகர்ந்து செல்கிறார். சீதா உடன் கோயிலுக்கு வரும் அருணின் அம்மா அவரைக் குறித்து பெருமையாக சீதாவின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பின்னர் சீதாவிற்கு தாலி பிரித்துப் போட வேண்டும் எனக் கூறி எல்லோரையும் முறையாக அழைக்கிறார். முத்துவையும் வரக் கூற சீதாவின் அம்மா தயக்கத்துடன் இருக்கிறார். பின்னர் அவர் சென்றவுடன் நீயா வர அவரிடம் இந்த விஷயத்தை சொல்ல மீனாவும் தயக்கமாக இருக்கிறார்.
