Siragadikka aasai: மீனாவுக்காக சண்டைக்கு நிற்கும் முத்து… ரோகிணியை அசிங்கப்படுத்திய விஜயா!

by AKHILAN |
Siragadikka aasai: மீனாவுக்காக சண்டைக்கு நிற்கும் முத்து… ரோகிணியை அசிங்கப்படுத்திய விஜயா!
X

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மீனா அவர் அம்மாவிடம் அவரால் என்னுடன் பேசாமல் இருக்க முடியாது. கண்டிப்பா அவரே வந்து என்னை கூப்பிட்டு போவார். சத்யா, நான் போய் மாமாக்கிட்ட பேசவா எனக் கேட்க இந்த நேரத்தில எதுவும் வேண்டாம். நீங்க அமைதியா இருங்க என்கிறார் மீனா.

பின்னர், அம்மா நான் வந்த விஷயத்தை சீதாவிடம் சொல்லாதே. அவ ரொம்ப கஷ்டப்படுவா? இன்னைக்கு அவ சந்தோஷமா இருக்க வேண்டிய நாள் என்கிறார் மீனா. பின்னர் எல்லாரும் படுத்துவிடுகின்றனர். முத்து, ரவி மற்றும் மனோஜுடன் மாடிக்கு குடிக்க வருகிறார்.

முத்து புலம்பிக்கொண்டு இருக்க இது மட்டும் மறைச்சி இருக்காளுனு தெரியலையே எனக் கேட்க மனோஜ் ஏத்திவிட்டு முத்து மீனாவுக்கு கால் செய்கிறார். உடனே மீனா பாருமா அவரால் என்னுடன் பேசாமல் இருக்க முடியாது என காலை அட்டர்ன் செய்கிறார்.

ஆனால் முத்து நீ ரெஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை என்னிடம் மறைச்சியே, இன்னும் என்ன விஷயம் எல்லாம் மறைச்சிருக்க எனக் கேட்கிறார். மீனா பேசாமல் அமைதியாக இருக்க சொல்லு மீனா எனக் கேட்க அவர் போனை கட் செய்து விடுகிறார்.

பாருடா கட் பண்ணிட்டா என முத்து சொல்ல மனோஜ் நீ மறுபடியும் கூப்பிட்டு பேசு என்கிறார். மறுபடியும் முத்து கால் பண்ணி என்ன பேசிட்டே இருக்கப்ப, நீ கட் பண்ணிட்ட எனக் கேட்க நான் பேசாம தான் கட் செஞ்சேன். நீங்க இப்போ நிதானத்தில் இல்ல. அதனால் எதா இருந்தாலும் காலையில் பேசலாம் என்கிறார்.

ரவி சமாதானம் செய்து முத்துவை கீழே அழைத்து போக பார்க்க அவர் வராமல் முரண்டு பிடிக்கிறார். பின்னர் ரவி மனோஜை வம்படியாக அழைத்து சென்று விடுகிறார். காலையில் எல்லாரும் ஹாலில் இருக்க ரோகிணி வந்து டீ கொடுக்கிறார்.

ஆனால் விஜயா அதை குடித்துவிட்டு இது வாயிலையே வைக்க முடியலை எனத் திட்டுகிறார். எனக்கு தெரிஞ்சத நான் போட்டு இருக்கேன் என ரோகிணி கூற இந்த வீட்டில ஒரு வேலைக்காரி இருந்தாலே அவளிடம் கத்து இருக்க வேண்டியது தானே என்கிறார்.

வேலைக்காரியா என அண்ணாமலை, முத்து, ரவி, ஸ்ருதி யோசிக்க யார் அது என்கிறார் முத்து. என்னடா தெரியாம கேக்குறான். அதான் அந்த மீனாவை என்றதும் கோபத்துடன் அவளுக்கும் எனக்கும் சண்டை அவளோதான். அவ வேலைக்காரி இல்ல. என் பொண்டாட்டி என்கிறார்.

இதை பார்க்கும் ஸ்ருதி நீங்க கேட்க மாட்டீங்கனு நினைச்சேன். பரவாயில்லை மீனா மேல உங்களுக்கு பாசம் என்கிறார். இதில் கடுப்பான விஜயா ரோகிணியை இவ வேலைக்காரிக்கு கூட லாயக்கு இல்ல என திட்டிவிட்டு செல்ல மனோஜ் முழித்து கொண்டே அவர் பின்னால் சென்று விடுகிறார். ரோகிணி கடுப்பாகிறார்.

Next Story