Siragadikka Aasai: முத்துவை ஓவராக புகழும் சீதா குடும்பம்… கடுப்பில் அருண்… ரோகிணிக்கு அடுத்த சம்பவம்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரூமுக்குள் வரும் ரோகிணி மனோஜிடம் முத்து பேசுனதை கவனிச்சீயா எனக் கேட்க அவன் என்ன பேசுனான் என்கிறார். மீனாக்கும் முத்துக்கும் சண்டையே இருந்தாலும் அவர் அவங்களை விட்டு கொடுக்காம இருக்காங்க. ஆனா நீ எனக்காக பேசவே இல்லை.
மீனாக்கு முத்து சப்போர்ட்டா இருக்கதால தான் ஆண்ட்டி என்ன திட்டுனாலும் அவங்க இங்க சந்தோஷமா இருக்காங்க. ஆனா நீ எனக்கு அப்படி இருக்கீயா. முத்து எந்த சந்தர்ப்பத்தில் கூட மீனாவை விட்டு கொடுத்ததே இல்லை. இதை கேட்கும் மனோஜ், இதுக்கு எனக்கு கோபம் தான் வந்து இருக்கணும்.
முத்து என்னைக்குமே அம்மா அந்த மீனா பத்தி பேசுனா போய் சண்டை போட்டு இருக்கான். ஆனா எனக்கு அப்படி என மனோஜ் யோசிக்க ரோகிணியை பார்த்து அவரை இழுத்து கொள்கிறார். பின்னர் அவரை காதலுடன் சமாதானம் செய்ய சிரிப்பு சத்தம் வெளியில் கேட்க விஜயா கதவை தட்டுகிறார்.
இதனால் ரோகிணி ஒளிந்து கொள்ள மனோஜ் கதவை திறக்கிறார். என்ன சத்தம் எனக் கேட்க தண்ணி சத்தம் என்கிறார் மனோஜ். அவ எங்க எனக் கேட்க பாத்ரூமில் இருப்பதாக சொல்கிறார். தண்ணி சத்தம் இல்ல. இது வேற எதோ என விஜயா ரூமை பார்த்துவிட்டு செல்கிறார்.

பின்னர் ரோகிணி மனோஜை கட்டி பிடித்துக்கொள்ள மொத டைம் நான் பாத்ரூமில் இருக்கேன் எனக் கூற எனக்காக பேசிய மனோஜை பார்க்கிறேன். இதை கேட்கும் மனோஜ் இனிமே நம்ம ஒன்னா இருப்போம். என்னாலையும் உன்னை பிரிஞ்சி இருக்கவே முடியாது என்கிறார்.
முத்து லேட்டாக வீட்டுக்கு வர மீனா இருப்பது போல் கற்பனை செய்து கொள்கிறார். சீதா புருஷன் வீட்டுக்கு கிளம்ப அக்கம் பக்கத்தினர் வந்து வாழ்த்து சொல்கின்றனர். ஒரு கட்டத்தில் அங்கிருப்பவர்கள் எல்லாரும் முத்துவை குறித்து ஆஹா ஓஹோ எனப் பேசுகின்றனர்.
கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கும், முத்துவிற்கும் ஆயிரம் பிரச்னை இருக்கலாம். ஆனா இனிமே இந்த குடும்பத்துக்கு நல்ல மருமகனா இருக்கணும். எது செய்றதா இருந்தாலும் முத்துக்கிட்ட கேட்டு செய்யுங்க என்கிறார். இதை கேட்டு அருண் கோபமாக நிற்கிறார்.
மீனா மற்றும் அவர் அம்மா இருவரும் சேர்ந்து சீதாவிற்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். முத்துவிற்கு சீதா கால் செய்ய நீங்க வரணும் எனக் கேட்க நான் டிரிப்பில் இருக்கேன். நீ பத்திரமா போய்ட்டு வா. நல்ல தைரியமா இருக்கணும் என அறிவுரை சொல்கிறார்.
பின்னர் அருணிடம் அறிவுரை சொல்லி இந்திரா சீதாவை அனுப்பி வைக்கிறார். முத்து ஷெட்டிற்கு வர அவர் நண்பர்கள் சாப்டியா எனக் கேட்க கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் பெருசா தெரியலை. இப்போ கஷ்டமா இருக்கு என முத்து புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
நீ தானே மீனாவை வெளியில் அனுப்புன எனக் கேட்க நான் போக சொல்லி இருந்தா போய்டுவாளா? அவளா வரட்டும் என்கிறார். பின்னர் சாப்பாடை கொடுக்க நீ எடுத்துட்டு வந்தியா எனக் கேட்க மீனா கொடுத்துவிட்டு சென்றதாக சொல்கின்றனர். முத்து சாப்பாட்டை திறக்க மீனாவே இருப்பதாக தோன்றுகிறது.