Siragadikka Aasai: ரோகிணிக்கு அடுத்த தர்ம அடி கொடுக்க போகும் ஸ்ருதி… தேவையா இந்த வேலை?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனாவை டீ போட்டு வர விஜயா சொல்ல மாறி மாறி என்ன வேலை வாங்கிட்டு இருக்கீங்க. அவ இந்த வீட்டோட வேலைக்காரி இல்ல. மருமகள் எனக் கூற விஜயாவும், முத்துவும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஒருகட்டத்தில் விஜயா கடுப்பில் எழுந்து சென்று விடுகிறார்.
பின்னர் ஸ்ருதி மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்க எங்க அம்மா ஸ்பை ஒருத்தரை நீத்து ரெஸ்டாரெண்டுக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அவங்க ரவி மற்றும் நீத்து பத்தி தப்பா சொல்லி இருப்பதாக சொல்ல மீனா இதுக்கு கூடவா ஆள் இருக்காங்க என்கிறார்.
நீங்க ரவியை தப்பா நினைக்காதீங்க எனக் கூற அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவன் போனா நானும் வேற ஆளை பார்க்க போறேன் என ஸ்ருதி பேச அதை ஒட்டுக்கேட்டு கொண்டு இருக்கிறார் ரோகிணி. பின்னர் ரோகிணி மனோஜ் ஷோரூமிற்கு வந்து மகாபலிபுரத்தில் தனக்கு ஒரு ஆர்டர் ஓகே ஆகி இருப்பதாக சொல்கிறார்.
அங்கு ஒரு நாள் தங்கவும் ஏற்பாடு செய்திருப்பதால் மனோஜை கூப்பிடுகிறார். ஆனால் மனோஜ் தன்னால் வர முடியாது. அம்மாக்கிட்ட என்ன சொல்றது எனத் தெரியலை. நான் வரலை என மறுத்து விடுகிறார். இதனால் ரோகிணி கோபமாக இருக்கிறார்.
ஷோரூமில் வேலை செய்யும் ராணி வந்து எங்க ஊரில இப்படி புருஷன் பொண்டாட்டி அன்யோன்யமா இல்லனா ஒரு லேகியம் கொடுப்பாங்க. அதை அனுப்ப சொல்லவா? அது சாப்பிட்டா அண்ணன் உங்க நினைப்பாவே இருப்பாரு என்கிறார்.
மறுபக்கம் முத்து தன்னுடைய காரில் ஒரு கஸ்டமரை அழைத்துக்கொண்டு செல்கிறார். பூ வாங்க வேண்டும் என அவர்கள் கூற மீனா அம்மா கடைக்கு அழைத்து செல்கிறார். சத்யா அருண் சொன்ன இடத்துக்கு இண்டர்வியூவிற்கு செல்கிறார்.
அப்போ முத்து வர அவர் பூவை கஸ்டமருக்கு வாங்க அழைத்து செல்ல முதலில் இருவரும் தெரியாதது போல பேசிக்கொள்கின்றனர். ஒருகட்டத்தில் அவர்களே இந்த விலைக்கு ஓகே என்கிறார்கள். பின்னர் அவர்களை அனுப்பி விட்டு மீனா முத்து ரொம்ப ஓவரு எனக் கூற சும்மா என்கிறார் முத்து.

அப்போ சீதாவை அழைத்து வந்து கோயிலில் விட்டு செல்கிறார் அருண். பின்னர் முத்துவை முறைத்துவிட்டு செல்ல சீதாவிடம் அவன் ஒழுங்கா பாத்துக்கிறானா? விவகாரம் பிடிச்ச ஆளு, எதுவா இருந்தாலும் எனக்கு சொல்லு என்கிறார். சீதா இவங்க இரண்டு பேரும் இப்படியே இருந்துடுவாங்களோ என்கிறார்.
எல்லாம் ஒருநாள் மாறும். சத்யா கூட தான் முதலில் உங்க மாமாவிடம் முட்டிக்கொண்டு இருந்தான். இப்போ ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்களே. அதுபோல இவங்களும் சரியாகிடுவாங்க என்கிறார். பின்னர் முத்து அண்ணாமலையை அவர் வேலை செய்யும் பள்ளியில் கொண்டு விடுகிறார்.