Siragadikka aasai: விஜயா வாங்க இருந்த அடியை நிறுத்திய மீனா... ரோகிணி அடுத்த சம்பவம் ரெடி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை தொடரில் விஜயா ஏற்கனவே ரோகிணியை கரித்து கொட்டி கொண்டு இருக்கிறார். பணக்கார கதை உடைக்கப்பட்டு விட்டதால் ரோகிணியின் அடுத்த ரகசியம் எப்போ வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இதில் சொத்து விஷயமே வெளிவந்துவிட்டது. ஆனால் மகனாக வளர்ந்த கிரிஷ் இருக்க அதை எப்படி ரோகிணியால் மறைக்க முடியும். எப்படியும் சிக்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதற்கான கதைகளத்தை தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் முத்து கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது ரோகிணியின் அம்மா மயக்கம் அடைந்து இருக்கும் நிலையில் அருகில் அமர்ந்து கிரிஷ் அழுது கொண்டு இருக்கிறார். அவரை சந்திக்கும் முத்து ரோகிணி அம்மாவை மருத்துவமனையில் அனுமதிப்பார்.

கிரிஷை வீட்டிற்கு அழைத்து வருகிறார் முத்து. விஜயா கடுப்படிக்க முத்து சத்தம் போட்டு அங்கு தங்க வைக்கிறார். நைட் நேரத்தில் ரோகிணியை பார்க்க கிரிஷ் செல்ல அவரை தனியாக அழைத்து வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நீ யாரிடமும் உன்னை பத்தி சொல்ல கூடாது.
அம்மானு சொல்லிடாத என கிரிஷிடம் சொல்லி இருக்க அப்போ மீனா கிரிஷை தேடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் கண்டிப்பாக மீனாவை ரோகிணி பேசி சமாளித்து விடுவார். இருந்தும் இன்னும் சில தினங்கள் கிரிஷ் இந்த வீட்டில் இருப்பதால் எமோஷனலில் எதுவும் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் விஜயா டான்ஸ் கிளாசில் இருந்த பெண் திடீரென கர்ப்பமாக அந்த பிரச்னையும் அவர் தலை மீது வருகிறது. அவர் வீட்டினர் விஜயாவிடம் வந்து வம்பு செய்து அடிக்க பாய மீனா தடுக்க வருகிறார்.
பல வாரங்கள் கழித்து மீண்டும் சிறகடிக்க ஆசை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. ரோகிணி சிக்கும் பட்சத்தில் இன்னும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.