Siragadikka Aasai: விஜயாவை சரிக்கட்ட ஐடியா கொடுத்த ரோகிணி… முட்டாள்தனமாக பேசி மாட்டிக்கொண்ட மனோஜ்…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ஸ்ருதியின் அம்மா வந்து நமக்கு தெரிந்த போலீஸ் இருக்கார். அவரிடம் இதை விசாரிக்க சொல்லலாமா எனக் கேட்க அப்படி விசாரிச்சா ஆண்ட்டியை தான் மாட்டுவாங்க என்கிறார் ஸ்ருதி. இதை தொடர்ந்து பரம்பரை வீடு ஒன்னு இருக்கு அங்கு போய் இருக்கீங்களா எனக் கேட்கிறார் ஸ்ருதியின் அம்மா. ரவி அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.
விஜயாவும் ஆமா எனக்கு எந்த பயமும் இல்ல. நான் இங்கையே இருக்கேன் என்கிறார். பின்னர் பார்வதி, சிந்தாமணி சொன்ன மாதிரி மண் சோறு சாப்பிடுவோம் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார். ஷோரூமில் மனோஜ் எல்லாரிடமும் கத்திக்கொண்டு இருக்கிறார்.
ரோகிணி வேலை செய்து கொண்டு இருக்கும் போது ராணி வந்து லேகியத்தை கொடுத்தீங்களா எனக் கேட்க இல்ல வீட்டில் ஒரு பிரச்னை என்கிறார். என்ன விஷயம் எனக் கேட்க ரதியின் கர்ப்ப கதையை சொல்கிறார். உடனே ராணி காசு கொடுத்து அதை முடிச்சிவிடுங்க. இல்லனா எல்லாருக்கும் தெரிஞ்சிடும் என சமாளிக்கிறார்.

ரோகிணிக்கும் அது சரியெனப்பட மனோஜிடம் காசை கொடுத்து இந்த பிரச்னையை நம்மளே முடிப்போம் எனக் கூறுகிறார். ஆண்ட்டியும் நம்மளை புரிஞ்சிப்பாங்க எனக் கூற காசுக்கு எங்க போறது என மனோஜ் கேட்க நம்மதான் ரெடி செய்யணும் எனக் கூறி மனோஜை ரதி வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
முத்து ஷெட்டில் மீனாவை விட்டு வேறு பெயரில் தீபனிடம் பேச சொல்கிறார். முத்து சொன்னது போல ரதி விஷம் குடித்துவிட்டதாக சொல்லி தீபனை பயமுறுத்தி முத்து ஷெட்டிற்கு வர வைக்கிறார். அவரும் ரதியை நினைச்சு பயந்து நான் உண்மையா தான் காதலிச்சேன் என ஓடி வருகிறார்.
அவரை பார்த்த முத்து அடிக்க பாய மீனா மற்றும் முத்து நண்பர்கள் அவரை பிடித்து விடுகின்றனர். தீபனை அவன் குடும்பத்தாருக்கு போன் செய்து உடனே இங்க வரச்சொல்கிறார். மனோஜ் ரதி வீட்டுக்கு சென்று திமிராக பேசுகிறார். ரதி வீட்டினர் எனன் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருக்க அங்கே மனோஜ் மற்றும் ரோகிணி வருகின்றனர்.
உங்களுக்கு ஹெல்ப் செய்யதான் வந்து இருக்கேன் என மனோஜ் பேசி ரதியின் கருவை கலைக்க சொல்கிறார். அதற்கான செலவை நானே செய்கிறேன். எங்க அம்மா டான்ஸ் கிளாஸில் நடந்தது தெரியக்கூடாது எனக் கூற அவர்கள் கடுப்பாகி மனோஜை ரவுண்டு கட்டி கட்டி சேரில் கீழே படுக்க வைத்து ரோகிணியையும் அந்த ரூமில் அடைத்து விடுகின்றனர்.
முத்து, தீபன் வீட்டினரை ரதி வீட்டிற்கு அழைத்து வந்து நிறுத்த சத்தம் போடுகின்றனர். ஆனால் முத்து நிறுத்துங்க. மொதலில் இரண்டு குடும்பமும் என்ன செய்யலாம் எனப் பேசுங்க என்கிறார். ஒருக்கட்டத்தில் அவர்கள் பேசி கல்யாணம் செய்யலாம் என முடிவெடுக்கின்றனர்.
நீங்க நல்லவரா இருக்கீங்க உங்க அண்ணன்தான் சரியில்லை என்கிறார்கள். முத்து அதிர்ச்சியாக எங்க அண்ணனா எனக் கேட்க ஆமாம் என்கின்றனர். ரூமில் இதை ஒட்டுக்கேட்கும் ரோகிணி ஐயோ மனோஜ் நம்மை பத்தி சொல்ல போறாங்க என்கிறார். மனோஜ் என் மானமே போச்சு என கதறுகிறார்.