Siragadikka Aasai: மீனாவுக்கும், சீதாவுக்கும் விழுந்த அடி… கண்கலங்கி சென்ற முத்து!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசையில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சீதாவை தான் நான் முதல் திருமணம் செய்து கொண்டேன் என்கிறார். இதை கேட்டும் முத்து அதிர்ச்சியாகி கல்யாணம் ஆகிடுச்சா எனக் கேட்க அருண் ஆமா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதனால்தான் நானும் சீதாவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டோம் என்கிறார்.
இதில் அதிர்ச்சியாகவும் மீனாவின் அம்மா கல்யாணம் ஆகிடுச்சா என சீதாவை கேட்க அவரும் உண்மையை ஒப்புக்கொள்கிறார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகி விடுகின்றனர். முத்து, உங்க அம்மாவையும், மீனாவையும் எதுக்கு ஏமாத்துன என்கிறார்.
மீனாவின் அம்மா மற்றும் சத்யா என எல்லோரும் கோபப்பட அந்த நேரத்தில் சாட்சி கையெழுத்து போட வந்த கான்ஸ்டபிள் இந்த கல்யாணத்துக்கு நான் தான் சாட்சி கையெழுத்து போட்டேன். பொண்ணுக்கு அவங்க அக்கா போட்டாங்க என உண்மையை உடைத்து விடுகிறார்.
ஆனால் முத்து அதை நம்பாமல் என் பொண்டாட்டிய பத்தி என்கிட்டையே பொய் சொல்றியா என சத்தம் போட்டு அவரிடம் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மீனா என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள் என கை கூப்பி தான் செய்ததை ஒப்புக்கொள்கிறார்.
இதில் முத்து அதிர்ச்சியாகி விடுகிறார். விஜயா பிரமாதம் என கலாய்க்க மீனா அம்மா அவரை தனியா அழைத்து வந்து மாப்பிள்ளை பார்த்தாரு. அதான் அப்பா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சி இருப்பாருனு சொன்னா அதான் பண்ணி வச்சேன் என்கிறார்.
மீனா, முத்துவிடம் பேச வர அவர் தடுத்து என்னையே ஏமாத்திட்டளனு அங்கிருந்து சென்று விடுகிறார். மீனாவின் அம்மா சீதா, மீனாவை அடித்து விடுகிறார். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் நினைச்ச மனுஷன் தலை குனிஞ்சு போறாரு.

உன் வாழ்க்கையில நீயே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டீயே என்கிறார். அருண் அம்மா எனக்கும் தெரியாது. ஆனா இனிமே நம்ம என்ன செய்றது என்கிறார். மீனா அம்மா, மாப்பிள்ளை இல்லாம இந்த கல்யாணம் நடக்காது. நானும் இருக்க மாட்டேன் எனக் கிளம்பிவிடுகிறார்.
முத்து டாஸ்மாக்கில் இருந்து குடித்து கொண்டு இருக்கிறார். செல்வம் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்ய முத்து பிடிவாதமாக மறுத்துவிடுகிறார். அருண் ரூமில் இருக்க அந்த சாட்சி கையெழுத்து போட்ட கான்ஸ்டபிள் அவன் என்ன பெரிய ஆளா எனத் திட்டுகிறார்.
அருண் அம்மா வர அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கம் மீனா அம்மா சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். நீ ஏன் இப்படி செஞ்ச? உன்னால உங்க அக்கா வாழ்க்கை போச்சு எனத் திட்டுகிறார். மீனா அப்படி நடக்காது என்கிறார்.
அதான் இப்போ போயிட்டாரே. அவர் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது என பிடிவாதமாக இருக்கிறார். மீனா அவரை நான் கூட்டிக்கிட்டு வரேன் எனக் கேட்க சீதா தானும் வரேன். சமாதானப்படுத்தி அழைச்சிட்டு வரலாம் எனக் கிளம்புகின்றனர். மறுபக்கம் அருண் அம்மா கல்யாணத்தை நடத்த பேசிக்கொண்டு இருக்கிறார்.