Siragadikka Aasai: என் பொண்டாட்டி சீதாவிடம் எகிறும் அருண்… அப்போ முத்து சொன்னது சரிதானே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சீதா மற்றும் அருண் அம்மா வந்து மீனாவின் அம்மாவிடம் பேசுகின்றனர். சீதா எங்க எனக் கேட்க அவ மாமாவை தேடி அலைச்சிட்டு வர போய் இருக்கா என்கிறார் சத்யா. முத்து டாஸ்மாக்கில் குடித்து கொண்டு இருக்க ஒருவருடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் தவறுதலாக மீனா குறித்து அசிங்கமாக பேச அவரை அடிக்க பாய்கிறார் முத்து. மீனா மற்றும் சீதாவை தேடி டாஸ்மாக் வந்து இறங்க அங்கு முத்து அவரிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். என் பொண்டாட்டி தங்கம் தெரியுமா? கண்ணகி மேல டா எனப் பேசுகிறார்.
இதை கேட்கும் மீனா கண்ணீர் சிந்த அதை முத்து பார்க்கிறார். முத்துவை அழைச்சிட்டு வரணும் எனக் கூறி டாஸ்மாக்கிற்குள் வருகிறார்கள் சீதா மற்றும் மீனா. சீதா என் வாழ்க்கையில இது ரொம்ப முக்கியமான நாள். நான் பண்ணது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க என்கிறார்.

முத்து நீ என்ன தப்பு பண்ண என்மேல் தான் தப்பு என்கிறார். சீதா கெஞ்சிக்கொண்டு இருக்க முத்து பிடிவாதமாக பேசுகிறார். நீங்க வராம நாங்க போக மாட்டோம் என பிடிவாதமாக சீதா மற்றும் மீனா இருவரும் உட்கார்ந்து விடுகின்றனர். மீனா பேச போக முத்து நீ பேசாத.
அன்னைக்கு உன்னை பார்த்தேன். அதுக்கு மேல கேள்வி கேட்காம இருந்ததுக்கு காரணம் உன்னை நம்பினேன் என்கிறார். அருண் மீனா அம்மாவிடம் சின்ன விஷயத்தை பெரிசு பண்றீங்க எனக் கேட்க எது சின்ன விஷயம். கல்யாணம் பண்ணது சின்ன விஷயமா என்கிறார்.
சீதாக்கு இப்போ நான் புருஷன். எனக்கு தெரியாம அவ எப்படி இங்கேருந்து போனா எனக் கேட்க இப்ப கல்யாணம் செஞ்ச நீங்களே கேட்கும் போது. ஒரு வருஷமா வாழ்ந்த முத்து என் மாப்பிள்ளைக்கு சொல்லாம செஞ்சதுக்கு எவ்வளோ கஷ்டமா இருந்து இருக்கும். அத யோசிச்சீங்களா எனக் கேட்கிறார் மீனா அம்மா.
அருண், அது அவங்க பர்ஷனல். சீதாவை வரச்சொல்லுங்க எனக் கேட்க என் மாப்பிள்ளை வராம இந்த கல்யாணம் நடக்காது என்கிறார். டாஸ்மாக்கில் முத்து வராமல் குடித்து கொண்டு இருக்க மீனா அவர் வராமல் நாங்க போக மாட்டோம் என்கிறார்.
அருண் சீதாவிற்கு கால் செய்ய, மீனா அவர் கால் செய்றாரு. வாங்க எனக் கூப்பிட முத்து நான் ஏன் வரணும் என்கிறார். சீதா கெஞ்சி கேட்குறேன் வாங்க மாமா என அழைக்க நீ ஏன் என்னிடம் கெஞ்சுற. போய் கல்யாணம் பண்ணிக்க என்கிறார்.
மீனா, அதுக்கான காரணத்தை சொல்லிட்டேன். இப்போ கல்யாணம் நின்னா எல்லாரும் அசிங்கப்படுவாங்க என்கிறார். நான் அசிங்கப்பட்டதை நீ யோசிக்கலையே. நீ ஏன் யோசிக்க போற நான் சாதாரண டிரைவர் தானே என்கிறார்.

டாஸ்மாக்கில் முத்து குடித்து கொண்டு இருக்க சீதா மற்றும் மீனா இருவரும் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் முத்து தன்னை கஷ்டப்படுத்தி விட்டீர்களே என புலம்பிக்கொண்டு இருக்கிறார். அங்கிருப்பவர்கள் மீனாவுக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர். மண்டபத்தில் மனோஜ் மற்றும் விஜயா பேச போக அண்ணாமலை அவரை அடக்குகின்றனர்.
அந்த நேரத்தில் பெரிய அதிகாரிகள் மண்டபத்துக்கு வர அருணால் என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பி கொண்டு இருக்கிறார். மீனாவின் அம்மாவிடம் போய் பேச போக அவர் இதை நீங்க முன்னாடியே யோசிச்சு இருக்கணும். உங்க தப்பால தான் இதெல்லாம் நடக்குது என்கிறார்.