ஏலம் போகும் வீடு… காசுக்காக முத்து எடுத்த திடீர் முடிவு… சாதிப்பாரா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தகவல்கள்.
விஜயாவின் வீட்டை மீட்க தான் கடந்த ஒரு மாத காலமாகவே எபிசோட் இழுக்கடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதை தொடர்ந்த எபிசோட் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது. விஜயாவின் வீட்டை ஏலத்திற்கு சிந்தாமணி நாள் குறித்து விட்டார்.
இதற்கான நோட்டீஸை எடுத்து கொண்டு வீட்டிற்கு வரும் வக்கீல். இனிமேல் நாம் எதுவும் செய்ய முடியாது. அவங்க சொன்ன காசை கொடுத்தால் மட்டுமே வீட்டை எடுக்கலாம் எனக் கூறிவிடுகிறார். பின்னர் அண்ணாமலைக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது.
விஜயா வீடு போய் விடுமோ என அழுகிறார். ஆனால் மீனா எப்படியாவது வீட்டை மீட்டுவிடலாம் என முத்துவிடம் சொல்கிறார். அவரும் வீட்டை மீட்டு தருவேன் என தைரியமாக பேசுகிறார். இது அவர்களின் கெளரவம் என்கிறார் மீனா.
ரெடி செய்து வைத்திருக்கும் பழைய கார்களுக்கு பைனான்சியரிடம் லோன் கேட்க சொல்கிறார். ஆனால் அவரோ இப்போ நீ பவ்யமா தான் பேசுவ ஆனால் திருப்பி கேட்கும் போது ஓவரா பேசுவ உனக்கு காசு தர மாட்டேன் என்கிறார்.
தொடர்ந்து முத்து கெஞ்சிக்கொண்டே இருக்க அவர் கடைசியாக சூரிட்டிக்கு ஆள் கொண்டு வா காசு தருகிறேன் என்கிறார். அவரும் சரியென கூறிவிட்டு ஆளை தேடி செல்கிறார். அப்போது யாருமே இல்லாமல் தன்னுடைய பழைய முதலாளியை தேடி செல்கிறார் முத்து.
அவரிடம் வீட்டில் நடந்த பிரச்சனையை சொல்லி காசுக்கு சூரிட்டி போட சொல்லும் ஐடியாவில் இருக்கிறார். இதை தொடர்ந்து இந்த வார எபிசோட் சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
