Siragadikka Aasai: பொய் சொல்றதுல ரோகிணி கில்லியாச்சே! கண்டுபிடிக்க முடியுமா?

by AKHILAN |
Siragadikka Aasai: பொய் சொல்றதுல ரோகிணி கில்லியாச்சே! கண்டுபிடிக்க முடியுமா?
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

கார் ஷெட்டிற்கு முத்து கோபமாக வர செல்வம் உன்னை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக கூறுகிறார். யார் என திரும்பிப் பார்க்க அங்கே அருணின் அம்மா நிற்கிறார். முத்து கோபமாக கிளம்ப பார்க்க உங்களிடம் சில விஷயங்களை பேச வேண்டும் என்கிறார்.

முத்து என்ன விஷயம் என கேட்க தனியாக பேச வேண்டும் என்கிறார் அருணை அம்மா. செல்வம் பகிர்ந்து சென்றுவிட, என்னோட பையன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். அருண் ரொம்ப நல்ல பையன். ஆனா உங்களுக்கும் அவனுக்கும் நடந்த மனக்கசப்பால அவன பிரச்சனையா நினைக்கிறீங்க.

சீதாவோட வீட்டுல உங்களோட சம்மதத்தை தான் முக்கியமா எதிர்பார்க்கிறார்கள். உங்க இடத்துல அவளுடைய அப்பா இருந்திருந்தா சீதாவுக்கு பிடிச்ச பையன் தானே கட்டி வச்சிருப்பாரு எனக் கூற முத்துவின் முகம் மாறுகிறது. எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவா எடுங்க.

அப்போ வரும் செல்வம் எனக்கு என்னவோ நீ இவங்க காதலை சம்மதம் சொல்லு. அந்த பொண்ணு நினைச்சா போய் கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா உன் சம்மதத்துக்கு தானே காத்திருக்கா என்கிறார்.

மறுபக்கம் விஜயா வீட்டில் பணத்தினை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அப்போது மனோஜ் வர என்ன காசு இது எனக் கேட்க வாடகை பணம் என்கிறார். அப்போ ரோகிணி வந்து ஒரு லட்சத்தினை கொடுக்க இது என்ன கள்ளநோட்டா எனக் கேட்கிறார்.

கள்ள நோட்டு அடிக்கிறவங்களை எனக்கு தெரியாது ஆண்ட்டி. கடனா வாங்கிட்டு வந்து இருக்கேன் என்கிறார். இது திருட்டு நகையை கொடுத்ததுக்கு இல்ல. என்கிட்ட பொய் சொன்னதுக்கு என ஒரு லட்சத்தினை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

ரூமிற்குள் வரும் மனோஜ் ரோகிணியிடம் எப்படி பணம் வந்துச்சு எனக் கேட்க வித்யாவிடம் வாங்கினேன். அதான் சண்டைனு சொன்னீயே எனக் கேட்க இப்போ சமாதானம் ஆகிட்டோம் என்கிறார். ஆனால் மனோஜ் நம்பாமல் பார்க்க என்ன நம்பவே மாட்டியா என்கிறார்.

இடையில நீ ஒரு குண்டை போட்டியே அப்போலேந்து தான் சந்தேகமாவே இருக்கு என்கிறார். ரோகிணி இப்படி சந்தேகப்பட்டு கொண்டே இருக்கதுக்கு என்னை மொத்தமா சாகடிச்சிடு என்கிறார். பின்னர் முத்து விஷம் குடித்து காப்பாற்றிய பெண் வீட்டில் இருந்து கால் வருகிறது.

நேரில் சென்று பார்க்க அவர்கள் வீட்டில் பங்ஷன் நடப்பதாக இருக்க முத்து என்ன விஷயம் என்கிறார். என் பொண்ணுக்கு அவ காதலிச்ச பையனையே கட்டி வச்சிட்டோம் என்கிறார். அந்த பெண்ணின் அப்பா நான் கூட தப்பா தான் நினைச்சேன்.

ஆனா பழகி பாத்தப்பறம் தான் புரிஞ்சிது என்கிறார். முத்துவின் முகம் மாறுகிறது. அந்த தம்பதிகளை பார்க்கும் போது சீதா, அருண் போலவும் தோன்றுகிறது. காரில் வரும் போது சீதாவின் வாழ்க்கையை நாம முடிவு எடுப்பது சரியாக என யோசிக்கிறார்.

Next Story