மொத்தமா கடனை அடைத்து வீட்டை கைப்பற்றிய முத்து… அவமானப்பட்ட சிந்தாமணி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
பைனான்சியர் காசு இப்போ வரும் அப்போ வரும் என இழுத்துக்கொண்டே இருக்க முத்து நானே சென்று வாங்கி கொள்வதாக கூறி பரபரப்பாக அவரை சந்திக்க செல்கிறார். பின்னர் காசை வாங்கிவிட்டு பைக்கில் கிளம்புகிறார்.
ஆனால் திடீரென பைக்கில் பெட்ரோல் இல்லாமல் ரோட்டில் சென்றவரிடம் தன் நிலைமையை சொல்லி அவரிடம் கெஞ்சி பெட்ரோலை வாங்கி விட்டு வேகமாக செல்கிறார். சரியாக ஏலம் முடிய போகும் நேரம் முத்து காசுடன் வந்து நிற்கிறார்.
மொத்த காசையும் எடுத்து வந்து கொட்ட இன்று வரை எங்களுக்கு நேரம் இருக்கு காசை கொடுக்க எனக் கேட்க சிந்தாமணி அதெல்லாம் முடியாது. இவங்ககிட்ட காசெல்லாம் சரியா இருக்காது. ஏலத்தை முடித்து எனக்கே இந்த வீட்டை மாத்துங்க என்கிறார்.
உடனே ஏலம் நடத்துபவர். காசை எண்ணச் சொல்ல அவரும் எண்ணுகிறார். பைனான்சியர் என்ன இப்படி ஆகிப்போச்சு எனக் கேட்க மீனாவிடம் இருந்த காசை அடிச்சாச்சு. இதில் கம்மியா தான் இருக்கும் என திமிராக பேசுகிறார்.
28 லட்சம் மட்டுமே இருக்க, பாத்தீங்களா என் காசுல 10 லட்சம் குறையுது எனக் கூற அண்ணாமலை கையில் இருந்த பையில் மீதி இருந்த பத்து லட்சத்தை வாங்கி மொத்த கடனை அடைத்து விடுகிறார். சிந்தாமணி அதிர்ச்சியாக இது எப்படி என யோசித்து கொண்டு இருக்கிறார்.
முத்து அவரிடம் என்ன சந்தேகமா இருக்கா எனக் கேட்டு அண்ணாமலையிடம் முத்து மீனாவிற்கு வந்த கனவை சொல்லி இந்த காசை நீங்க எடுத்துட்டு வந்துருங்க எனச் சொல்கிறார். ஏலமும் ரத்து செய்யப்பட்டு காசை எடுத்துக்கொண்டு வீட்டை அண்ணாமலையிடம் கொடுக்க சொல்லிவிடுகின்றனர். ஏமாற்றத்தில் இருக்கிறார் சிந்தாமணி.
