அம்மாவா? ரோகிணியா? மனோஜை லாக் செய்த பெண்கள்… செமையா இருக்கே!!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
மனோஜும் விஜயாவும் அந்த பங்ஷனில் கலந்துக்கொள்ள இவர்களை முறைத்தப்படி இருக்கிறார் ரோகிணி. மனோஜும் ரோகிணியை பார்த்து பயந்துக்கொண்டே நிற்கிறார். அந்த சமயம் தாய் மகன் தலைப்பில் இருவரையும் மேடை ஏற்றுகின்றனர்.
அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அம்மாவா உங்க மகனிடம் என்ன பிடிச்சிது எனக் கேட்க மற்ற இரண்டு நாமினிக்களுடன் விஜயா மனோஜும் இருக்கின்றனர். விஜயா என்னுடைய மகன் திறமை தான் பிடிக்கும். அவன் அஞ்சு டிகிரி படிச்சி இருக்கான். இப்போ தொழிலதிபராக இருக்கான் என்கிறார்கள்.
அம்மாவின் தியாகம் பற்றி மனோஜிடம் கேட்க எங்க அம்மாவால் தான் இதெல்லாம். அவங்க என்ன நினைச்சாலும் செஞ்சு முடிப்பேன் என்கிறார். இதையெல்லாம் ரோகிணி கடுப்புடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். மனோஜ் விஜயா அந்த விருதை பெற்றுவிடுகின்றனர்.
தம்பதி கேட்டகிரியில் மனோஜ் ரோகிணி மனோஜை அழைக்க விஜயா அதிர்ச்சியாக பார்க்கிறார். இதுக்காக தான் கிளம்புனீயா எனக் கேட்டு திட்டி அவரை அழைத்து செல்கிறார். அப்போ ரோகிணி வர உனக்கு அறிவே இல்லையா? இவன் பின்னாடியே சுத்துற!
அவன் என் மகன். அதுக்கு இந்த விருது சாட்சி. இனிமே அவன் கிட்ட வராத. சீக்கிரம் உன்கிட்டேந்து டைவர்ஸ் வாங்குவான் எனக் கூறிவிட்டு செல்கிறார். முத்து மீனாவிடம் சத்யா பேசிய விஷயத்தை கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். அவனை எதும் செஞ்சாங்களா எனக் கேட்கிறார்.
முத்து இல்ல. அவங்க நல்லவங்க தான் யோசிச்சு சொல்வதாக சொல்லி இருக்காங்க என்கிறார். பின்னர் சிந்தாமணி தன் கணவருடன் பேசி ரேகாவை நம்ம கண்ட்ரோலில் வைக்கணும். அவளை இங்க வர சொல்லுங்க. உடனே சத்யாவுக்கு ஒரு ப்ளான் செய்வோம் என திட்டம் போடுகிறார்.
