Siragadikka Aasai: மீனாவால் தெரிந்த உண்மை… காப்பாற்றப்பட்ட முத்து… அடுத்த ட்விஸ்ட்..

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
சிட்டி திருட்டு நகையை ரோகிணியிடம் தள்ள பார்க்கிறார். அவரும் முதலில் யோசிக்க பின்னர் வாங்கிக்கொள்கிறேன் என்கிறார். பொருமையா கொடுங்க ஆனா எனக்கு பணம் சீக்கிரம் தேவை. அதையும் மனசில வச்சிக்கோங்க என்கிறார். ரோகிணி வெளியில் வந்து வித்யாவுக்கு கால் செய்கிறார்.
வித்யாவிடம் கால் செய்து சிட்டியிடம் இப்படி ஒரு நகை இருக்கு என்றும் அதை வாங்க இருப்பதாகவும் சொல்கிறார். அவனிடமா எதாவது பிரச்னையாகிடும் எனச் சொல்ல இல்ல விசாரிச்சிட்டேன் என்கிறார். எதுக்கு இப்போ எனக் கேட்க என் மாமியாருக்கு தான் அப்போதாவது அவங்க மனசு சரியாகுதா என பார்ப்போம் என்கிறார்.
சரி உன்னிடம் காசு இருக்கா எனக் கேட்க என்னிடம் இல்லை என்கிறார். உன்னிடம் இருக்கா என வித்யாவிடம் கேட்க என்னிடம் இல்லையேடி என்கிறார். உன் லவ்வரிடம் கேட்டு பாரு எனக் கேட்க அவரிடம் எப்படி இருக்கும் என வித்யா கேட்க வீடு வாங்க காசு வச்சி இருந்தாரே எனச் சொல்ல அவர் எப்படி சரியா நியாபகம் வச்சி இருக்கா பாரு என யோசித்து கேட்டு பார்க்கிறேன் என்கிறார்.
மீனாவிடம் அவருக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அருணின் வீடியோவை காட்டி இப்படி உன் புருஷன் செஞ்சது சரியா? இதுல இனிமே நான் எதுவுமே பண்ண முடியாது என்கிறார். மீனா கெஞ்ச தன்னால் எதுவும் முடியாது என்கிறார். உடனே ஸ்டேஷன் சென்று எதுவும் பேசு எனக் கூறுகிறார்.
மீனா ஸ்டேஷன் வந்து இருக்க அந்த நேரத்தில் பிரேக் பிடிக்காத காரை எடுத்து சென்ற கான்ஸ்டபிள் புலம்பி கொண்டு இருப்பதை மீனா பார்த்து விடுகிறார். அவரிடம் சென்று எங்களுக்காக உண்மையை சொல்லுங்க எனக் கெஞ்சுகிறார் மீனா.
ஆனால் அந்த கான்ஸ்டபிள் எதுவும் பேசாமல் இருக்க இன்னொரு போலீஸ் வெளியில் சென்று வெயிட் செய்ய சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி வர அவருக்கு தண்ணி கொடுத்து ஆட்டோவில் ஏற்றி விடுகிறார். இதை அந்த கை உடைந்த போலீஸ் பார்க்கிறார். அந்த அம்மா நீ நல்லா இருக்கணும் என வாழ்த்தி விட்டு செல்கிறார்.
கோயிலில் அந்த அம்மா சொன்னது போல நல்லா இருக்கணும் எனச் சொன்ன வார்த்தை கேட்டு விட்டால் முத்துவின் பிரச்ச்னை பனி போல விலகும் என்கிற விஷயம் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் முத்து அங்கு போலீஸுடன் வர அவரை இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார்கள்.
அவர் எப்படி கான்ஸ்டபிள் அருண் வீட்டில் கல் எறியலாம். அவர் மீது எஃப் ஐ ஆர் போடணும் எனச் சொல்லி ஜெயிலில் போட சொல்ல மீனா அந்த கை உடைந்த போலீஸிடம் கெஞ்சுகிறார்.
உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்தா சும்மா இருப்பாங்களா எனக் கெஞ்ச அந்த கான்ஸ்டபிளும் மீனா செஞ்ச உதவியை நினைச்சு முத்து காரில் பிரேக் இல்லை என உண்மையை சொல்லி விடுகிறார்.