சிறகடிக்க ஆசையில் சூடு இல்லையா? எதுமே தேறாதுனு சொல்ற லெவலுக்கு வந்தாச்சு!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் ரூமில் இருக்க சந்தோஷி கால் செய்து ரோகிணி அப்பா குறித்து விசாரிக்கிறார். ஆனால் அவர் இறந்த விஷயத்தை கூறாமல் இன்னொரு பிசினஸுக்கு வெளிநாடு சென்று இருப்பதாக மனோஜ் சமாளித்து விடுகிறார்.
ரோகிணி ஏன் என்று கேட்க ஏற்கனவே நம்ம ஏமாந்தது அவருக்கு பிளாக் மார்க்கா இருக்கும். இப்போ உங்க அப்பா ஜெயில இருந்தாரு. அவரு இறந்தது சொன்னா நம்மளை தான் தப்பா நினைப்பாரு என்கிறார். ரோகிணி ஆமா அப்புறம் வா பிசினஸ் பண்ணலாம்னா நான் தான் மாட்டிப்பேன் என்கிறார்.
என்ன என மனோஜ் கேட்க ஒன்னும் இல்லை என்கிறார். நீ மாமாவிடம் இதுகுறித்து பேசு என்கிறார். ரோகிணி சரியென கூறுகிறார். ஹாலில் முத்து மற்றும் மீனா இருவரும் ஆவி பிடித்துக்கொண்டு இருக்க விஜயா என்ன இது ஹாலில் எனக் கேட்க ஆவி பிடிக்கிறோம் என்கிறார். அப்போ வரும் மனோஜ் பார்க்காமல் காலை வைத்து விழுகிறார்.
இதெல்லாம் ரூமில் செய்ய வேண்டிதானே எனக் கேட்க எங்களுக்கு ரூம் இல்ல. அதுனால இனி இங்கதான் என்கிறார். ஸ்ருதியும் அவர் சொல்றது உண்மைதானே. நீங்க பார்த்து வரணும் எனக் கூற மனோஜ் எப்பையும் என்னைதானே சொல்லுவீங்க எனக் கூறி செல்கிறார்.
ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் ஹோட்டலில் சண்டை செய்து கொண்டு இருக்கின்றனர். இது என்ன அது என்ன என கேள்வி கேட்க ஸ்ருதி கஸ்டமருக்கு சூப் எடுத்து போக அவர் நீங்க குடிச்சி பாருங்க என்கிறார். ஸ்ருதி நல்லா இல்லையா எனக் கேட்க அப்போதான் ஸ்பூன் இல்லாததை பார்க்கிறார். ரவியிடம் வந்து எதுக்கு ஸ்பூன் கொடுக்கலை எனத் திட்டுகிறார்.
செல்வம் மற்றும் முத்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது கான்ஸ்டபிள் அருண் போனில் பேசிக்கொண்டு ஹெல்மெட் போடாமல் வருவதை வீடியோவாக எடுக்கிறார். மேலும் நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்துவதையும் வீடியோ எடுக்க செல்வம் முத்துவை தடுக்கிறார். அப்போ முத்துவிடம் வரும் கான்ஸ்டபிள் மீண்டும் சண்டை போடுகிறார்.