மனோஜுக்கு வாய் கொழுப்பு மட்டும் அடங்காதே… சிறகடிக்க ஆசையில் இன்னைக்கு சூப்பர் அப்டேட்!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள்.
மனோஜ் தனக்கு தெரிந்த அந்த டயட்டீஷியனை அழைத்து வருகிறார். அவர் விஜயாவுக்கு உடல் எடை குறைக்க வேண்டும் எனக் கூறி இனி காபி குடிக்க கூடாது. சுகர் சாப்பிடக்கூடாது எனக் கூறி சாப்பிட வேண்டிய லிஸ்ட்டை சொல்லுகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நீங்க தேஜஸா தான் இருக்கீங்க. உடம்பு குறைச்சா சின்ன பொண்ணா மாறிடுவீங்க என்கிறார். உடனே ரோகிணி சொல்லி இருக்கேன்ல ஆண்ட்டி என்கிறார். உடனே முத்து அப்பாக்கு பொண்ணு மாதிரி ஆகிடுவீங்க எனக் கலாய்க்கிறார்.
ஃபன்னியா பேசுறீங்க எனக் கூறும் டயட்டீஷியன் சமைக்க வேண்டியதையும் வாங்கி கொண்டு வந்து தருகிறார். இதற்கு 3500 ரூபாயும், என்னுடைய ஃபீல் 4500 ரூபாயும் எனக் கூறுகிறார். இதை கேட்டு மனோஜ் ஷாக்காக விஜயா உடனே ஓகே சொல்லி விடுகிறார்.
தானும் டயட் இருக்க போவதாகவும் மனோஜ் கூறி மீனாவை தனக்கும் சமைக்க சொல்லுகிறார். உடனே மீனா சமைக்கிறதுக்கு எவ்வளவு ஃபீஸ் எனக் கேட்க தேவை என்றால் 300 ரூபாய் வரை வாங்குவோம் என்கிறார். உடனே மனோஜ் இதெல்லாம் ரொம்ப ஓவர் எனக் கூற அப்போ அவர் மனைவியை சமைக்க சொல்லுங்க என்கிறார்.
எனக்கு வேலை இருக்கு மீனா என ரோகிணி கூற எனக்கும் தான் வேலை இருப்பதாக மீனா கூறுகிறார். ரவியிடம் டயட் ஃபுட்டுக்கு ரெஸ்டாரெண்ட்டில் எவ்வளவு வாங்குவாங்க எனக் கேட்க அவர் 2000 என்கிறார். உடனே முத்து 500 ரூபாய் வேண்டும் எனக் கேட்கிறார்.
தொடர்ந்து மனோஜ் 300 ரூபாய் கூட ஓகே 500லாம் ஓவர் என்கிறார். முத்து உடல் எடை குறைவது குறித்து யோசித்து சிரித்து கொண்டு இருக்க அண்ணாமலை என்னாச்சு என்கிறார். அம்மா கூட பரவாயில்ல. இவன் எல்லாம் உடம்பு குறைஞ்சா பல்லி மாதிரி இருப்பான் எனக் கலாய்க்கிறார்.
மறுபக்கம் கான்ஸ்டபிள் அருண் வீட்டில் மீண்டும் வேலையில் சேருகிறார். முத்து கிழித்த சட்டையை பார்த்து கோபமாக இருக்க அப்போது சீதா பூ கொடுக்க வருகிறார். காசு வாங்கி வருவதாக சொல்லி அருணிடம் போக இன்னும் நீ இதை மறக்கலையா எனக் கேட்கிறார்.
சீதாவிடம் நடந்த விஷயத்தை கூற நீங்க போலீஸ் தானே அவனை பிடிச்சு உள்ளே போட வேண்டிதானே எனக் கூற அப்போ தான் சஸ்பென்ஷனில் இருந்தேன் என்கிறார். அதுக்கான நேரம் வரும் என சீதா கிளம்பி விடுகிறார். விஜயா டான்ஸ் கிளாஸில் இருக்கிறார்.
பார்வதி டீ போட போக எனக்கு வேண்டாம். அந்த பூ கட்டுறவ வருவா டயட் சாப்பாடு எடுத்துக்கிட்டு எனக் கூற சிந்தாமணி யார் எனக் கேட்க அவ மருமகளை தான் அப்படி சொல்வதாக சொல்கிறார். அப்போது மீனா வந்து சிந்தாமணியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.