கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க… விஜயா, மனோஜுக்கு நடந்த சூப்பர் சம்பவம்.. தேவைதான்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான தொகுப்பு.
பார்வதி வீட்டில் விஜயா, சிந்தாமணி பேசிக்கொண்டு இருக்க அங்கு மீனா வருகிறார். சிந்தாமணி அவரை மட்டம் தட்டி ஓவராக பேச மீனாவும் அதற்கு சரியாக தக்க பதிலடியை கொடுத்து வருகிறார். இவங்க இங்க டான்ஸ் கத்துக்க வரலை. வேவு பார்க்க வந்ததாக கூறுகிறார்.
பார்வதியும் ஓ இதான் விஷயமா என நினைத்து கொள்கிறார். உங்க கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டா நாளைக்கு அவங்க தான் பெஸ்ட்டுனு கூட சொல்லுவாங்க. உங்க டயட் சாப்பாடெல்லாம் இதில் இருக்கு. சாப்பிட்டுக்கோங்க எனக் கொடுத்துவிட்டு செல்கிறார் மீனா.
வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். உடனே மனோஜ் டேப்பை எடுத்து அளந்து தனக்கு ஒரு இன்ச் குறைந்துவிட்டதாக சொல்கிறார். இதில் விஜயாவே கடுப்பாகி ஒரே நாளில் குறைஞ்சிட்டா வா வந்து சாப்பிட உட்காரு என்கிறார். மீனா சாப்பாடு உள்ள இருக்கு எனக் கூற அவர் பொண்டாட்டியை எடுத்துக்க சொல்லுங்க என்கிறார்.
ரோகிணியும் எடுத்து வந்து பரிமாற அப்போது ஸ்ருதி மற்றும் ரவி பீட்சாவுடன் வருகின்றனர். இதை பார்த்து எல்லாரும் அதை சாப்பிட விஜயாவிற்கு எச்சில் ஊறுகிறது. இருந்தும் தன்னுடைய கெத்தை விடாமல் அந்த டயட் சாப்பாட்டை சரியில்லை என மீனாவை திட்டிக்கொண்டே சாப்பிடுகிறார்.
ஒரு கட்டத்தில் எதுக்கு இந்த டயட் என அண்ணாமலை, முத்துவெல்லாம் பேசுகின்றனர். எனக்கு உதவி செஞ்சா இந்த வீட்டில் இருக்கலாம். இல்ல அவங்க வெளியில் போகட்டும் எனக் கூறுகிறார் விஜயா. இதற்கு மனோஜும் ஜால்ரா அடிக்க அம்மா கூட எப்பையும் போல பேசுறாங்கனு விட்டேன். நீ வாய் பேசாத என அவரை மிரட்டி வைக்கிறார்.
எல்லாரும் ஒரு வழியாக சாப்பிட்டுவிட்டு போய் படுத்துவிடுகின்றனர். மனோஜ் மற்றும் விஜயாவிற்கு வயிறு சரியில்லாமல் போய் தொடர்ந்து பாத்ரூம் செல்கின்றனர். 10 முறை போய்விட்டதாக மனோஜ் சொல்ல எனக்குதான் என்கிறார் விஜயா. இருவரும் வந்து ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர்.