முத்துவிற்கு சப்போர்ட் செய்த ரவி… விஜயாவிற்கு இந்த அவமானம் தேவையா?

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை எபிசோட்டின் தொகுப்புகள்.

வித்யா சாமி கும்பிட்டு கொண்டு இருக்க அவர் பின்னாடி வரும் முருகனிடம் அப்புறம் என்னங்க எனக் கேட்க நான் அப்புறம் சொல்றேன் என்கிறார். அதே நேரத்தில் சீதா மற்றும் அருண் உள்ளே வருகின்றனர். சீதாவிடம் அருண் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிறார்.

இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். அதுவரை நண்பர்களாக இருப்போம் எனக் கூற அருணும் என்னை பிடிச்சு இருக்கா எனக் கேட்கிறார். சீதா கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டீங்களா என்கிறார். அவரும் சரி என்கிறார். பரசு வீட்டில் கல்யாண விஷயம் குறித்து பேச மீனா மற்றும் முத்து வருகின்றனர்.

டெக்கரேஷனுக்கு எவ்வளவு ஆகும் என மீனா கேட்க பாத்துக்கலாம் என்கிறார். இல்லம்மா சொல்லு என பரசு கேட்க 20 ஆயிரம் போதும் என்கிறார். உடனே அவர் 30 ஆயிரம் கொடுக்கிறார். முத்துவிடம் கேட்க டீசலுக்கு மட்டும் 4 ஆயிரம் கேட்க அவர் 8 ஆயிரம் எழுதுகிறார்.

மேக்கப்புக்கு ரோகிணியிடம் கேட்க அவர் முதலில் 20, 30 ஆயிரம் ஆகும் எனக் கேட்க 10 ஆயிரம் பண்ண முடியுமா என மீனா கேட்க 12 ஆயிரம் மேக்கப் பொருட்களின் காசை மட்டும் கொடுங்க என்கிறார். பின்னர் கறிக்கடைக்காரர் கால் செய்ய பரசு ஸ்பீக்கரில் பேசுகிறார்.

அவர் கல்யாண வேலையெல்லாம் எப்படி நடக்குது எனக் கேட்டுவிட்டு கல்யாணத்துக்கு சீர் வரிசை ஜாமானில் தான் வாங்குவது குறித்தும் பேசுகிறார். அந்த குரலை கேட்டது போல இருப்பதாக மீனா மற்றும் முத்து சொல்கின்றனர்.

வீட்டில் விஜயாவுக்கு ஸ்ருதியின் அம்மா கால் செய்து ரெஸ்டாரெண்ட் விஷயத்தை பேசுனீங்களா எனக் கேட்கிறார். அவர் இல்லை இனிதான் பேசணும் என்கிறார். விஜயா நேராக அண்ணாமலையிடம் சென்று ஸ்ருதி அம்மா கூறியதை சொல்ல அவர் ரவிக்கு படிப்பு இருக்கு. அவனுக்கு திறமை இருக்கு அவன் பிழைச்சிக்குவான் என்கிறார்.

நம்ம பையன் நல்லதுக்கு தானே சொல்றாங்க எனக் கேட்க அவர் வரதட்சணை வாங்க போறியா என்க நீங்க சொன்னாதான் கேட்பான். ஆமா நான் சரியா சொல்லுவேனு கேட்பான். ஆனா இந்த விஷயம் என சரியா படலை என்கிறார். ரவியிடம் இந்த விஷயத்தை கூற விஜயா அழைக்கிறார்.

முத்து ரவியிடம் ஸ்ருதியின் அம்மா பிளாக் செக் கொடுக்க வந்ததாக கூற மனோஜ் அது பிளான்க் செக் எனத் திருத்துகிறார். பரவாயில்ல அதுவும் கருப்பு பணம் தானே என்கிறார். ரவி நான் தான் ரெஸ்டாரெண்ட்டிலே பேசி அனுப்பிட்டேனே எனக் கோபப்படுகிறார்.

மனோஜ், முத்து அந்த செக்கை கிழித்து அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பியதாக கூறுகிறார். நான் இருந்தாலும் அதை தான் செஞ்சிருப்பேன் என்கிறார் ரவி. இதை கேட்ட முத்து சூப்பர்டா நீதான் என் தம்பி என்கிறார்.

Next Story