மிகப்பெரிய சிக்கலில் மீனா… எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்னு காத்திருக்கே! இனி சூடு பிடிக்கும்..

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்க இருக்கும் தொகுப்புகள்.

மீனா தன்னுடைய டெக்கரேஷன் ஆர்டர் செய்ய காசு தேவைப்படுவதாக பைனான்சியரை பார்க்க செல்கிறார். அந்த பைனான்சியரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் எதற்காக பணத்தேவை என்கிறார். தான் கல்யாண டெக்கரேஷன் செய்து வருவதாக சொல்கிறார். அதை கேட்ட பைனான்சியர் முகம் மாறுகிறது. இருந்தும் மீனா தன்னுடைய பிரச்னையை சொல்லுகிறார்.

அப்போ அவருக்கு மீனா மீது நல்ல அபிப்ராயம் வருகிறது. உடனே சென்று பணம் எடுத்து கொண்டு இருக்கிறார். அப்போ அவர் வீட்டில் மனைவி மற்றும் மகள் படம் இருக்க அதை பார்த்தால் மீனாவின் போட்டியாளர் சிந்தாமணியின் படம் இருக்கிறது.


இதனால் தான் டெக்கரேஷன் என்றதும் அவர் முகம் மாறிய காரணம் புரிந்தது. வட்டி எவ்வளோ சார் என மீனா கேட்க அதெல்லாம் வேண்டாம். நான் என்னால முடிஞ்ச உதவியை என்னை சுத்தி இருக்கவங்களுக்கு செய்றேன். நீங்க ரெண்டு நாளில் தருவேன் என்பதால் வட்டி எதுவும் வேண்டாம் என்கிறார்.

அடுத்த நாள் மீனா டெக்கரேஷன் செய்து கொண்டு இருக்கிறார். பின்னர் வேலையை முடித்துவிட்டு முத்துவிடம் சந்தோஷமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். அடுத்த நாள் மீதி காசை கேட்க போக அந்த மேனேஜர் நக்கலாக பேசுகிறார்.

அன்னைக்கே மொத்த காசையும் வாங்கி விட்டதாக பத்திரத்தை காட்ட மீனா அதிர்ச்சி அடைகிறார். ப்ளீஸ் சார் காசை கொடுத்து விடுங்க என கெஞ்ச அவர் மனசாட்சியே இல்லாமல் அங்கிருக்கும் பெண்களை வைத்து மீனாவை வெளியேற்றுகிறார்.

அழுதுக்கொண்டே மீனா செல்ல சிந்தாமணி இதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின்னர் விஜயாவுக்கு கால் செய்து சொல்லி கொண்டு இருக்கிறார். விஜயாவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார். முத்துவும் ஊரில் இல்லை.

இதனால் சிந்தாமணியின் கணவராக வந்திருப்பவர் மீனாவுக்கு உதவி செய்வாரா என்றும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால் சீரியலில் இன்னும் பரபரப்பு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story