ரோகிணியை விரட்ட விஜயா செய்த சம்பவம்… இனிமே ஆட்டம் மாஸா இருக்குமே?

ரோகிணி ஒரு பக்கம் மனோஜை தன் பக்கம் சாய்க்க போராடி கொண்டு இருக்க முத்து மீனா வீட்டுக்கு போராடி கொண்டு இருக்கிறார். 
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தகவல்கள். 

மீனாவை சுயநலவாதியாக திட்டுகிறார் விஜயா. அந்த சிந்தாமணி உன்னை ராஜினாமா செய்தால் வீட்டுக்கு சீல் வைத்ததை எடுத்து விடுவதாக சொன்னாள நீ ஏன் இன்னும் செய்யாம இருக்க எனத் திட்டுகிறார். 

முத்து, மீனா அவங்க சொன்னதுலேந்து அதை தான் யோசிச்சிட்டு இருக்கா? நான் தான் அமைதிப்படுத்தி வச்சிருக்கேன் என்கிறார். விஜயா அப்போ உனக்கு வீட்டுக்கு போக ஆசை இல்லையா என கடுப்படிக்கிறார். 

அண்ணாமலை இந்த வியாக்கனம் கதைலாம் உன் பையனிடம் கேட்டு இருக்கணும். அப்போ கடனை வாங்கிட்டு இப்போ என்ன பேசிட்டு இருக்க நீ எனத் திட்டுகிறார். ரவியை அழைத்து என் பையனை எதுக்காகவும் அடமானம் வைக்க எனக்கு விருப்பம் இல்லை என்கிறார். 

ரவியும் நான் நம்ம வீட்டை விட்டு போக மாட்டேன். அந்த காசை நான் வாங்க மாட்டேன் என்கிறார். பின்னர் விஜயாவுக்கு மட்டன் சமைக்க சந்திரா சத்யாவிடம் சொல்ல அவர் காசு இல்லை என சங்கடப்படுகிறார். கடன் வாங்கி வாங்கிட்டு வா என்கிறார். 

இதை கேட்கும் விஜயா அதெல்லாம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். பின்னர் சந்திரா வெளியில் போய்ட்டு வருவதற்குள் விஜயா சமைத்து வைத்து இருக்கிறார். அந்த நேரத்தில் சந்திராவும் சத்யாவும் வந்துவிட அண்ணாமலையும் வருகிறார். 

எல்லாருக்கும் சாப்பாடு போட்டு கொடுக்க நல்லா இல்லை என்றாலும் அமைதியாக சாப்பிட்டு செல்கின்றனர். பின்னர் மனோஜ் கடை சிசிடிவியை விஜயா பார்த்து கொண்டு இருக்க அப்போ ரோகிணி வருகிறார். 

வந்துட்டா வந்துட்டா எனக் கடுப்பாகி அந்த ஸ்பீக்கர் மூலம் ரோகிணியை அசிங்கமாக திட்ட தொடங்குகிறார். ஆம்பளையை பிடிக்க வந்துட்டியா என கேட்க ரோகிணி அதிர்ச்சியில் நிற்க மனோஜும் சத்தமில்லாமல் அமைதியாகவே இருக்கிறார். இனி ரோகிணி என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

From Around the web