Siragadikka Aasai: என்னம்மா விஜயா இப்படி மனசாட்சியே இல்லாம பேசுறீங்க?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
மனோஜால் மொத்த குடும்பமுமே கஷ்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சிந்தாமணியை முத்து, மீனா மிரட்ட செல்ல அவரோ சங்க தலைவி பதவியை ராஜினாமா செய்தால் வீட்டை விடுவேன் என கூறிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் இந்த விஷயம் தெரிந்து சிந்தாமணியிடம் சண்டைக்கு செல்கிறார் விஜயா. கூடவே பார்வதி செல்ல உன்கிட்ட அப்போவே சொன்னேன். அவங்கள நம்பாதே என்று எனக் கூறிக்கொண்டு இருக்கும் போதே சிந்தாமணி வருகிறார்.
எதுக்காக எங்க வீட்டை ஏமாத்தி வச்சிருக்கீங்க. நல்லா என்னிடம் நடித்து எங்க வீட்டு விஷயத்தை வாங்கி இருக்கீங்க எனத் திட்டுகிறார். இப்படி சம்பாரிச்சு யாருக்கு வச்சிருக்கீங்க உங்க பொண்ணுக்கு தானே. அவ ஒன்னும் இல்லாதவனோட ஓடி போக போறா எனத் திட்டிவிட்டு செல்கிறார்.
ரவி வீட்டுக்காக எதுவுமே செய்ய முடியலையே எனக் கஷ்டப்பட்டு கொண்டு இருக்க ஸ்ருதி அப்பா, அம்மா அழைத்து நாங்க லோன் அடைக்க 10 லட்சம் தரோம். ஆனா அந்த காசை கொடுத்தா நீங்க இந்த வீட்டுலையே இருக்கணும் என்கிறார்கள்.
இதில் கடுப்பாகும் ரவி என்ன என்னை விலைக்கு வாங்குறீங்களா எனத் திட்டிவிட்டு செல்கிறார். ஸ்ருதி இதை நீ ஏன் அப்படி பாக்குற? நம்ம வீட்டு பிரச்சனையை சரி செய்துடுவோம். பின்னர் அந்த காசை அடைச்சிட்டு வீட்டுக்கு போவோம் என்கிறார்.
இதில் குழப்பத்தில் இருக்கும் ரவி இதை வீட்டில் வந்து சொல்ல விஜயா தாம்தூம்மென குதிக்கிறார். முத்து பிரச்சனை வந்தா எல்லாரும் நம்மளை பந்தாடுறாங்க. சுயநலமா யோசிக்கிறாங்க என்கிறார். விஜயா உன் பொண்டாட்டியும் அதான் எனக் கடுப்படிக்கிறார்.
சிந்தாமணி சொன்னது போல சங்க தலைவி பதவியை ராஜினாமா செய்ய விஜயா சொல்கிறார். இவங்க பையனுக்கு கடன் வாங்க அந்த பொண்ணு கஷ்டப்படணுமா? ஆனா இந்த தியாகி என்ன செய்ய போகுதோ? இப்படி செஞ்சிட்டு இருந்தா சீரியலுக்கு ஊஊ தான் போல!
