திமிர் பேச்சு பேசும் மனோஜ்… கடுப்பான முத்து, ரவி… ஓவர் ஆட்டமா இருக்கே?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
விஜயா குறித்து சந்திரா பேசியது தப்பு தான் என முத்து பேசுகிறார். மீனா என்னை உங்க அம்மா நல்லா பாத்துக்கல. அதில் எதும் மன கஷ்டத்தில் எங்க அம்மா சொல்லி இருக்கலாம் என தொடர்ந்து சொல்லியும் முத்து புரிந்து கொள்வதாக இல்லை.
எங்க அம்மா உன்னை நல்லா பாத்துக்கலை. இருந்தாலும் அவங்க பத்தி எதுவும் சொல்லி இருக்க கூடாது. இப்போ இந்த பிரச்சனையை வேறு நான் பாக்க வேண்டுமா? இத கேட்டா அப்பா கஷ்டப்படுவாங்க எனவும் திட்டிவிட்டு பேசுகிறார்.
பின்னர் முத்து மற்றும் ரவி இருவரும் மனோஜை பார்க்க ஷோரூம் செல்கின்றனர். அங்கு ரவி இந்த பிரச்னைக்கு நீ தா காரணம். இருந்தாலும் யார் எவ்வளோனு இல்லாம உன்னால எவ்வளோ காசு கொடுக்க முடியும் சொல்லு என்கிறார்.
ஆனால் மனோஜ் அப்பா எனக்கு அந்த வீட்டுல பங்கே இல்லனு சொல்லிட்டாரு. இனிமே அது எப்படி போனா எனக்கு என்ன கவலை என்கிறார். இதில் கடுப்பான முத்து மனோஜை அடிக்க பாய அவரும் கடுப்பாகிறார்.
ரவி என்னடா இப்படி பேசிட்டு இருக்க அப்பா கோபத்துல சொல்லி இருப்பாரு. அதெல்லாம் செய்வாரு எனக் கூற அப்போ எழுதிக்கொடுக்க சொல்லு என்கிறார். இன்னும் கடுப்பில் முத்து கத்த உன் பங்குக்கு மேல கடன் வாங்கி வச்சிருக்க என்ன பேசிட்டு இருக்க என்கிறார்.
ரவி ஒரு கட்டம் போய் எங்க பங்கில் பாதி தருகிறோம் எனக் கூறி அதையும் எழுதி தர சொல்ல முத்து திட்டிவிட்டு ரவியை அழைத்து செல்கிறார். மீனா சத்யாவை சந்தித்து பைனான்ஸில் சில லட்சம் கடனாக வாங்கி தர கேட்கிறார்.
ஆனால் சத்யா எதாவது அடமானம் கேட்பாங்களே எனக் கேட்கிறார். இருந்தாலும் நான் கேட்டு பார்க்கிறேன் எனக் கூற அவரும் ஓனரிடம் வந்து இந்த விஷயத்தை சொல்கிறார். முதலில் அவரும் தயங்க பின்னர் ஒரு முடிவுடன் உனக்காக செய்யணும்னு நினைக்கிறேன். டைம் கொடு யோசிச்சு சொல்கிறேன் என்கிறார்.
