சிறகடிக்க ஆசை: இந்த எபிசோட்ல ஒன்னுமே இல்லையே? ஐய்யா டைரக்டர் என்ன இது?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
விஜயாவுக்கு மறுபடியும் சம்பாரிக்க ஆசை வந்துவிடுகிறது. ஆனால் இந்த முறை டான்ஸ் கிளாஸ் வைக்காமல் டான்ஸ் ஆசிரியை வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி பார்வதியிடம் தனக்கென ஒரு வேலையை ரெடி செய்தும் விடுகிறார்.
இருக்க இடம் கொடுத்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் பூ விற்று மீனா அவ அம்மா நல்லா சம்பாரிக்கிறாங்க, நானும் வேலைக்கு போய் சம்பாரிக்க வேண்டும் என டயலாக் அடிக்கிறார். விஜயாவிற்கு திருந்துவதாக எண்ணமே இல்லை போல!.
இந்த விஷயத்தை அண்ணாமலையிடம் வந்து சொல்லி அவரிடம் அனுமதி கேட்டு நிற்கிறார். ஆனால் மீனாவின் அம்மா, முத்து மீனா என எல்லாரும் ஏன் இதெல்லாம் எனக் கேட்க விஜயாவோ பிடிவாதமாக நான் வேலைக்கு போக வேண்டும் என அடம் பிடிக்கிறார்.
ரோகிணி வீட்டில் வெட்டியாக சீரியல் பார்த்து மாமியார் மருமகள் சண்டையில் விஜயாவை நினைத்து சத்தமாக திட்டிக்கொண்டு இருக்கிறார். பின்னர் அந்த சீரியலில் மருமகள் மாமியாரை அடித்து விட ரோகிணி ஜாலியாக கை தட்டுகிறார்.
இதில் கடுப்பாகி அவர் அம்மா திட்ட நானும் என் மாமியாரை அப்படி செய்வேன். அவங்க என்ன எப்படி பேசுனாங்க தெரியுமா என கோபமாக கத்துகிறார். கிரிஷ் இதை அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறார். பின்னர் முத்து சவாரிக்கு ஒரு அம்மா அவர் பொண்ணுடன் வருகிறார்.
மன நிலை சரியில்லாத பெண்ணாக இருக்கிறார். அந்த அம்மா ஜூஸ் வாங்க செல்ல முத்துவும் காரை நிறுத்திவிட்டு இறங்கி போன் பேசுகிறார். அந்த பெண் ஆட்டோவில் ஏறி தப்பிவிடுகிறார். அவரை முத்து துரத்திக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே கதை சரியில்ல இதுல இதெல்லாம் எதுக்கு ரீதியாக இருக்கு இன்றைய எபிசோட் களம்.
