சிந்தாமணி மேல இருக்க கடுப்புல விஜயா செய்ய போற சம்பவம்! சத்யாவுக்கு கல்யாணமா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
தற்போது வீடு ஜப்தியாக இருக்கும் நிலையில் மீனா வீட்டில் விஜயா மற்றும் அண்ணாமலை இருக்கின்றனர். இந்த வீட்டை மீட்க முத்து போராடி கொண்டு இருக்கிறார். அவருடைய ஆங்கில வகுப்பு ஃப்ரண்ட்டை அழைத்து கொண்டு பைனான்சியரை பாக்க செல்கிறார்.
அங்கு அவர் மிரட்டி விசாரித்ததில் தன்னுடைய பணம் இல்லை எனக் கூற சிந்தாமணி தான் அவர் காசை கொடுத்து கடன் கொடுக்க வைத்ததாக சொல்கிறார். இதில் அதிர்ச்சியாகும் முத்து, மீனா என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கின்றனர்.
சிந்தாமணியின் முக மூடியை முத்து மீனா விஜயாவிடம் சொல்லி விடுவார்கள். அதை தொடர்ந்து கடுப்பில் விஜயா நேராக சிந்தாமணியை திட்ட போகிறார். அதில் கடுப்பாகி நீ யாருக்காக இந்த சொத்தை சேர்த்து வைக்கிற உன் பொண்ணுக்காக தானே.
அவ ஒன்னும் இல்லாதவனோட ஓடி போவா என சாபம் கொடுக்கிறார். தெரிஞ்சு செஞ்சாரா இல்லையா எனத் தெரியவில்லை. ஏற்கனவே சத்யா மற்றும் ரேகா லவ் செஞ்சிட்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரம் அவர் அப்பாவிற்கு தெரிந்து இருக்கிறது.
அவர் இதனால் தன பிரித்து வைத்திருக்கிறார் என தெரிந்துவிட்டால் முத்து உதவியுடன் சத்யா கல்யாணம் செஞ்சிக்க வாய்ப்பு இருக்கு. இதனால் விஜயா வீட்டை சத்யாவே மீட்டு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்தாமணி ஒரு பக்கம் வீடு வேண்டும் என்றால் மீனாவிடம் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சொல்ல இனி மீனா என்ன முடிவெடுப்பார் என்று வேறு பரபரப்பு பத்திகொண்டு இருக்கிறது.
