மனோஜின் திருட்டுத்தனம்… உஷாரான குடும்பம்… என்ன ஆக போகுதோ?
சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோடில் தொடர்ச்சியாக பல திருப்பங்கள் நடந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வீட்டிற்கு வரும் மனோஜ் தான் ஐந்து லட்சத்தை ரெடி செய்து விட்டதாகவும் எனக்கு யாரும் உதவி செய்ய அவசியம் இல்லை எனவும் திமிராக பேசுகிறார். ஆனால் அவர் பேசுவதை விஜயா கூட நம்பாமல் இதை முத்து மீனா சொல்லியிருந்தால் நம்பி இருப்பேன் என பேச எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
பின்னர் முத்து மனோஜை கேள்வி கேட்க அவர் தான் பணத்தை ரெடி செய்து விட்டேன் என தைரியமாக பேசுகிறார். அப்போ சத்தியம் செய் எனக் கூற அவர் கையை எடுத்து மனோஜ் தலையை வைத்து விடுகிறார். மனோஜ் ஜெர்கானாலும் கடன் வாங்க மாட்டேன் என சத்தியம் செய்கிறார்.
விஜயா அவரை ரூம்குள்ளே அழைத்து சென்று யாரிடம் கடன் கேட்டிருக்க உண்மையை சொல்லு என கேட்க தன்னுடைய நியூமராலஜிஸ்ட் காசை பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டதாக விஜயாவையும் சமாளித்து விடுகிறார்.
சத்யா மற்றும் ரேகா இவரின் திருமண செலவிற்கு குறித்து முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவி சுருதி இருவரும் ஒரு லட்சம் பணத்தை கொடுத்து, வீட்டு கடன் பிரச்சனையிலும் உதவுவதாக நம்பிக்கை கொடுக்கின்றனர்.
ஆங்கில வகுப்பில் இருக்கும் போது ஸ்வேதா பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். காதல் குறித்து பேச சொல்ல மிஸ்ரா அப்படியே தன்னுடைய காதலையும் அவரிடம் சொல்லிவிட ஸ்வேதா கோவத்துடன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். நாளையிலிருந்து சத்தியா கல்யாண கலாட்டா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
