Siragadikka Aasai: சீதா கல்யாணத்துக்கு வந்துட்டாங்கப்பா! நல்லா சேதியா போய்ட்டு இருக்கே?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் டாப் ஒன் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசையில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
நம்ம ஜாதகம் பொருத்து பாத்து கட்டி வச்சாலும் வாழ போறது அவங்கதானே. அதான் அவளுக்கு பிடிச்சவளையே கட்டி வைக்கலாம் சொல்லிட்டேன் என்கிறார். ரவி பெருமையாக லேட்டா டிசிஷன் எடுத்தாலும் சரியா எடுத்து இருக்க என்கிறார்.
அண்ணாமலை என் முத்துவுக்கு வாழ வச்சுதான் பழக்கம் என்கிறார். விஜயா நீ ஒத்துக்கலைனாலும் அவ ஓடிப்போய் கட்டி இருந்து இருப்பா என்கிறார். அதற்கு முத்து எப்பனு இருக்கீங்க. ஓடிக்காளி உங்க மூத்த பிள்ளைதான். எங்க சீதாக்கு அந்த பழக்கமே இல்லை என்கிறார்.

மீனாவின் முகம் மாறுகிறது. முத்துவிடம் உங்களுக்கு அப்போ ஓகேவா எனக் கேட்க எனக்கு எல்லாம் ஓகே தான் என்கிறார். நாளைக்கு எங்க கூட வருவீங்களே எனக் கேட்க வந்துடுவேன் என்கிறார். அப்பா நீயும் வரணும் எனக் கூற கண்டிப்பா வருவேன் என்கிறார்.
மீனா விஜயாவையும் கூப்பிட உன்னைய பொண்ணு பார்க்க வந்தப்பையே வெறுப்பா தான் வந்தேன். இதுல இந்த விஷேசத்துக்கு வரணுமா என்கிறார். அதான் உங்க வீட்டுக்கு ஒரு தியாகி இருக்கே அவரை கூப்பிட்டு போ எனக் கூற அண்ணாமலை யாரை சொல்ற நீ எனக் கேட்கிறார்.
நீங்கதான் எனக் கூற உன்னை கட்டிக்கிட்டப்பையே நான் தியாகிதான் என்கிறார். மறுபக்கம் ஷோரூமில் இருக்கும் ரோகிணி, முருகனை அழைத்து அவரிடம் வாங்கிய ஒரு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு வித்யா என்னை தூக்கி போட்டுட்டா. கஷ்டத்துல தான் ஒருத்தவங்களோட ரியல் ஃபேஸ் தெரியும்.
நான் அவளை நம்புனேன். ஆனா அவ இப்போ மாறிட்டா என்கிறார். முருகன் பிரண்ட்ஸ் உள்ள சண்ட வரது சகஜம். சீக்கிரம் சரியாகிடும் என்கிறார். அவர் சென்ற பின் ரோகிணி உட்கார்ந்து இருக்க அங்கு பிஏ வருகிறார். ரோகிணி அதிர்ச்சியாக ஒரு செட்டில்மெண்ட்டா பத்து லட்சம் கேட்கிறார்.
இல்லனா உன் வீட்டுக்கு இல்ல உன் கொழுந்தனுக்கு கால் பண்ணி சொல்லுவேன். அவன் நம்பர் கூட என்னிடம் இருக்கும் என்கிறார். சீதா வீட்டில் பெண் பார்க்க எல்லாரும் கூட இருக்க அருணின் அம்மா மற்றும் அருண் இருக்கின்றனர். சின்ன மண்டபமா பிடிச்சு பண்ணிடலாம் என்கிறார்.
அருண் எனக்கு ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு எனக் கூற என்னப்பா என்கிறார் அண்ணாமலை. என் கல்யாணம் முன்னவே நடக்க இருந்துச்சு. ஆனா தேவையில்லாததால் லேட்டாகிடுச்சு. மேலதிகாரிகள் வருவாங்க அதான் யாரும் குடிச்சிட்டு வரக்கூடாது என்கிறார். நான் போலீஸ் இல்ல அதான் எனக் கூறுகிறார்.
முத்து இது என்ன கண்டிஷன். பத்திரிக்கை வைக்கிற வீட்டில் போய் குடிக்காம வாங்கனு சொல்ல முடியுமா என்கிறார். அண்ணாமலை அவரை சமாதானம் செய்து அமைதிப்படுத்துகிறார். சீதா கல்யாணத்துக்கு 13 பவுன் நகை போட ஒப்புக்கொள்கின்றனர்.
ஆனால் இன்னும் கொஞ்சம் நகை தேவைப்படுவதால் என்ன செய்வது என யோசித்துகொண்டு இருக்கின்றனர். கல்யாணம் செலவு குறித்தும் பேசி வருகின்றனர்.