விவாகரத்துக்கு ரெடியான ரோகிணி… ஆனா விஜயாவுக்கு பல்ப் தான்!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
siragadikka aasai

கடந்த சில எபிசோடுகளாகவே பரபரப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த சிறகடிக்க ஆசை சீரியல் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

மனோஜ் 5 லட்சம் பணத்தை ரெடி செய்து விட்டதால் ரோகிணியை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட வர சொல்லி இருக்கிறார். மனோஜை பிரிய மனமில்லாமல் ரோகிணி அழுது கதறுகிறார்.  இருந்தும் வேறு வழியில்லாமல் அவர் கையெழுத்து போட தயாராகிறார்.

அதே நேரத்தில் மனோஜும் ரோகிணியை பிரிவது குறித்து வருத்தத்துடன் இருக்கிறார். ஆனால் இதில் விஜயா மட்டும் தன்னுடைய மகனுக்கு பணக்கார மருமகளை கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்ற சந்தோஷத்தில் ஓவர் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதன்படி கையெழுத்து போடும் நாளில் பூஜை செய்து ரொம்ப சந்தோஷமாக வலம் வருகிறார். ரோகிணி தனியாக வராமல் வித்யாவை துணைக்கு அழைத்து வருகிறார். அவர் வந்ததிலிருந்து ரோகிணியை மட்டமாக விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார். 

தொடர்ந்து வக்கீல் விவாகரத்து பத்திரத்துடன் வந்து ரோகிணிக்கு விவரங்களை கூறிக் கொண்டிருக்கிறார். மனோஜும் தான் வைத்திருந்த ஐந்து லட்சம் பணத்தை ரோகிணிக்கு முன் வைக்கிறார். வித்யா பத்திரத்தை வாங்கி வாசித்துப் பார்க்கிறார்.

ரோகிணி கஷ்டத்துடன் வந்திருப்பது மற்றவர்களுக்கு புரிந்தாலும் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் தங்களுடைய முடிவில் மாற்றமில்லாமல் நிற்கின்றனர். இந்நிலையில் ரோகினி கையெழுத்து போட தயாராகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

ஆனால் இந்த வார ப்ரோமோவின்படி கையெழுத்து போடும்போது ரோகிணி மயங்கி விழுகிறார். பின்னர் சோதித்துப் பார்த்ததில் அவர் கர்ப்பம் என தெரிய வருகிறது. விஜயாவின் ஆசைப்படி முதல் பேரக்குழந்தை மனோஜின் குழந்தையாக இருந்தாலும் இப்போ அதில் கூட அவரால் சந்தோஷப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது.

அதே நேரத்தில் பப்பரப்பா மனோஜும் இரண்டாம் கல்யாணம் வேறு பண்ணிவிட்டார். இனி பிரச்சனை சூடு பிடிக்கும். அடுத்து ரோகிணி என்ன செய்ய போறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

From Around the web