விஜயாவை விட மோசம் இந்த மனோஜ் தான்! ரோகிணி நிலைமை கஷ்டம் தானோ?
கடந்த சில எபிசோடுகளாக டல்லடித்து வந்த சிறகடிக்க ஆசை தொடரில் சரியான பூகம்பம் தற்போது வெடித்து இருக்கிறது.
ரோகிணி கர்ப்பம் என டாக்டர் கூறிவிட்டு செல்ல இனிமே விவாகரத்து தன்னால் தர முடியாது என ரோகிணியும் கறாராக கூறிவிடுகிறார். மேலும் இந்த குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா என கூறிவிட்டு அவரிடமும் நம் அப்பா அம்மா ஆக போகிறோம்.
இனிமே நம்ம சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார். அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் ரோகிணி தன்னுடைய முடிவை தெளிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
இதில் விஜயா மீண்டும் ரோகிணியை வசைப்பாடிக் கொண்டிருக்க இந்த விஷயத்துல மனோஜுக்கும் பங்கு இருக்கு. அவனை கேளுங்க முதல்ல என முத்து விஜயாவிடம் கூறுகிறார். குடும்பத்தினர் மனோஜை வளைத்து இதில் நீ என்ன செஞ்ச என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் தயங்கி முழித்துக் கொண்டிருக்கும் மனோஜ் பின்னர் ஒரே போடாக தனக்கு இந்த விஷயத்தில் எந்த சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிடுகிறார். மேலும் ரோகிணியின் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தான் அப்பா இல்லை என பெரிய குண்டை தூக்கி போடுகிறார்.
இப்பதான் தெரியுது. இந்த சீரியலோட உண்மையான வில்லன் மனோஜ் தான் என்று. ஆனால் மீனா மற்றும் சுருதி இருவரும் ரோகிணி பொய் சொல்பவள்தான். ஆனால் இதை அவள் செய்திருக்க மாட்டார் என பிடிவாதமாக பேசுகின்றனர்.
இருந்தும் விஜயா மகன் சொல்வதை தான் நம்புகிறார். மனோஜும் எனக்கு இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கறாராக கூறி விடுகிறார். வீட்டிற்கு வரும் ரோகிணி அவர் அம்மாவிடம் நடந்த விஷயங்களை கூறி அழுது கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டில் மனோஜ் கனகாவை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இந்த நேரத்தில் ரோகிணி கர்ப்பமாகிவிட்டாளே என கோபத்தில் இருக்கிறார். இனிமேல் ரோகிணி ஃபார்முக்கு வந்தால் மனோஜ்க்கு திண்டாட்டம் தான் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
