ரோகிணிக்கு சாதகமாகும் விவாகரத்து வழக்கு!... மனோஜுக்கு ஆப்படிக்கும் வக்கீல்!
சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டு இருந்த சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது சரியான கதைக்களம் தொடங்கி இருக்கிறது. இதனால் இனி ஆட்டம் செம சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருப்பவர்கள் ரோகிணி கர்ப்பம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். மனோஜ் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என கூறினாலும் ரோகிணி இந்த விஷயத்தில் பொய் சொல்பவர் இல்லை என மீனா நம்புகிறார். அவர் சொல்லியதே சரியென முத்துவும் நினைக்கிறார்.
அதேவேளையில் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் பொய்யா பேசினால் தான் மாட்டிக் கொள்வோம் என்பது ரோகினிக்கு கண்டிப்பாக தெரியும். அதனால் இந்த குழந்தைக்கு மனோஜ் தான் அப்பாவாக இருப்பார் என்கிறார்.
அடுத்த நாள் காலை விஜயா வக்கீலை சந்திக்கிறார். தற்போது மனோஜ்க்கு டைவர்ஸ் கிடைப்பதில் பெரிய சிக்கல்கள் தான் இருக்கிறது. விஜயா இந்த குழந்தைக்கு தன் மகன் அப்பா இல்லை எனக் கூற அப்படி நாம வாதாடினால் டிஎன்ஏ செய்ய சொல்வார்கள்.
அதன்பின் மனோஜ்தான் அப்பா என முடிவானால் மேலும் நமக்கு பிரச்சினை தான் நடக்கும். நான் மனோஜை பார்த்ததிலிருந்து இந்த குழந்தைக்கு அவர் தான் அப்பாவாக இருப்பார் என விஜயாவை மேலும் பயமுறுத்தி விடுகிறார்.
அதே நேரத்தில் ரோட்டில் ரேகாவை சந்திக்கிறார் மீனா. வீட்டில் சும்மா இருக்காமல் வேலை தேட முடிவு எடுத்திருப்பதாக அவர் கூற வருத்தப்படும் மீனா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதே நேரத்தில் சிந்தாமணியும் ரேகாவை ரோட்டில் சந்திக்கிறார்.
இவனோட வாழாத உன்னால இங்க வாழ முடியாது நீ கஷ்டப்படுவ என அவர் கூறிக் கொண்டிருக்க, என்னை சத்யா நல்லா பார்த்துக்கிறான். என் மாமியாரும் என்னை நல்லா தான் வச்சிருக்காங்க நாங்க நல்லா இருந்து காட்டுவோம் என ரேகா சவால் விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
