ரோகிணி கர்ப்பம்… புது பொண்டாட்டி கனகா… வசமாக மாட்ட போகும் மனோஜ்!
சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜுக்கு சரியான ஆப்பு தயாராகி வருகிறது. இதனால் வரும் வாரங்களில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என நம்பப்படுகிறது.
ரேகா தன் வீட்டில் சந்தோஷமாக தான் இருக்கேன் எனச் சொல்லிவிடுகிறார். சிந்தாமணி கோபமாக சென்று விடுகிறார். மீனாவும் பயத்தில் அவர் எப்படி வசதி இல்லாமல் இங்கு இருக்கிறார் எனக் கேட்க ரேகாவும் நான் சந்தோஷமாக தான் இருக்கேன் என்கிறார்.
பின்னர் விஜயா மனோஜ் கடைக்கு வந்து விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார். அதெல்லாம் இல்லை. தனக்கு விவாகரத்து வேண்டும் என்கிறார். அப்போ உண்மைய சொல்லு. வீட்டில் இருக்கவங்கள ஏமாத்துலாம். என்னிடம் உண்மையை சொல்லு என்கிறார்.
அப்போதும் மனோஜ் ரோகிணி வயித்தில் இருக்கும் குழந்தைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றே கூறுகிறார். இதில் மகன் மீது ரொம்ப சந்தோஷத்தில் விஜயா அப்போ முத அவகிட்ட பேசு என்கிறார். விஜயா நானா எனக் கேட்க ஆமா. இல்லை நான் பேசுவேன் என்கிறார்.
மனோஜும் இல்லை நானே பேசுகிறேன் எனக் கூறிவிடுகிறார். வீட்டில் மீனா ஸ்ருதியை அழைத்து அவரும் ரேகா போல தானே. ஒரே பெண். பணக்கார வீட்டில் பிறந்தவங்க. எப்படி இங்க சமாளிச்சீங்க என்கிறார். பிடிச்சவன் கூட இருந்தா எல்லாமே செட்டாகும் எனக் கூறுகிறார்.
பின்னர் முத்து மற்றும் மீனா மனோஜ் கடைக்கு செல்ல அங்கு கனகா இருக்கிறார். யார் கூட வந்தீங்க எனக் கேட்க என் ஹஸ்பெண்ட் எனக் ஷாக் கொடுக்கிறார். முத்து மற்றும் மீனா இருவரும் சந்தேகமாக பார்க்க நியுமராலஜிஸ்ட் தான் என அவரை காட்டிவிடுகிறார். அவர்களும் சந்தேகப்படாமல் சரியென கூறிவிடுகிறார். பின்னர் ஏசியை ஓகே பண்ணி வாங்கிவிட்டு கிளம்புகின்றனர். ரேகாவிற்காக ஏசி வாங்கி வந்து இறக்கி இருக்கிறார்கள். இதை பார்க்கும் சந்திரா, சத்யா எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர்.
