மனோஜுன் திருட்டுத்தனத்துக்கு ஆப்பு ரெடி.. களத்தில் இறங்கும் முத்து!!
சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் குடும்பத்தினரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், விரைவில் அவர் மாட்டப் போகும் விஷயம் நடக்க இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சீதாவை அருண் அடித்திருந்த நிலையில் முத்து மற்றும் மீனா இருவரும் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர். ஆனால் முத்துவிற்கு மனது கேட்காமல் சீதா வீட்டில் இருக்கிறார் அப்பொழுது அருண் அங்கு வருகிறார்.
சீதா இருப்பதாக நினைத்துக் கொண்டு இவனை எதற்கு உள்ள விட்டாய் என சத்தம் போடுகிறார். நீ எவ்வளவு கூப்டாலும் சீதா வரமாட்டா? அந்த பிள்ளையை போய் இவ்வளவு அடிச்சு வச்சிருக்க என முத்து அருணிடம் கோபமாக பேசுகிறார்.
ஆனால் அவர் என்னோட பொண்டாட்டியை நான் என்ன வேணாலும் செய்வேன் என திமிராக தான் பதில் தருகிறார். இதில் கடுப்பாகும் முத்து அருணை அடித்து விட்டு நீ திருந்தி மன்னிப்பு கேட்டால் தான் சீதா இனிமே உன்னோட வாழ்வா என கூறுகிறார். அதே நேரத்தில் அருண் என தேடி சீதா வருவா என சபதம் போடுகிறார்.
வீட்டில் மனோஜ் வர அவரை அழைத்துப் பேசும் விஜயா ரோகிணியிடம் பேசி விட்டாயா என கேட்க நடந்த விஷயங்களை மறைத்து தான் இன்னும் பேசவில்லை எனக் கூறுகிறார். மீண்டும் குடும்பத்தினர் அந்த குழந்தை உன்னுடையது தான் எனக் கூற மனோஜ் தொடர்ந்து மறுக்கிறார்.
இதில் கடுப்பாகும் மீனா அப்போ நீங்க ரோகினிய தப்பான பொண்ணு சொல்றீங்களா என்கிறார். ஆனால் மனோஜ் அதற்கு பதில் சொல்லாமல் சென்று விடுகிறார். அண்ணாமலை பெயரும் இதில் தவறாக போகும் என்பதால் முத்து இதை விசாரிக்க வேண்டும் என குடும்பத்தினர் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அருண் சீதாவிற்கு கால் செய்ய அந்த போனை மீனாவின் அம்மா வாங்கி அருணை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார். வரும் எபிசோடுகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
