முத்துவால் அழுகும் மீனா… என்னப்பா இதெல்லாம் நல்லா இருக்கா?
சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில் இன்றைய எபிசோட் மேலும் பல ஆச்சரியத்தை உள்ளடக்கி இருக்கிறது.
மீனாவிற்கு கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சினைக்காக சர்ஜரி செய்ய இருக்கிறார்கள். இதற்காக முத்து அவர் நல்லபடியாக குணமாக வேண்டும் என்பதற்காக முதியோர் இல்லத்திற்கு தன்னால் முடிந்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்..
அங்கு இருப்பவர்கள் முத்துவின் ஆசையை கேட்டு அது நடக்க வேண்டும் என அவருக்கு ஆசீர்வாதம் தருகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் மீனா முத்து செய்வதை பார்த்து கடவுளை விட நீங்க என் மேல பாசம் அதிகமாக வச்சிருக்கீங்க என கண்ணீர் விட்டு அழுகிறார்.
சீதா தன்னுடைய கராத்தே கிளாஸில் இருக்கிறார். அவரை மீனா வந்து பார்த்து ஆறுதல் சொல்லி கொண்டிருக்கிறார். இனிமே நீ எந்த பிரச்சினையும் இல்லாம இருப்ப என எனக்கு தைரியம் இருப்பதாக சீதாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு அருண் வந்துவிட மீனாவும் சீதாவும் ஒளிந்து கொள்கின்றனர். வேலை விஷயமாக வரும் அருண் அதை முடித்துவிட்டு வெளியேறும் போது மீனாவை பார்த்து சீதா இல்லனா என் வாழ்க்கை முடிஞ்சிடும் என நினைக்காதீங்க என திமிராக பேசிவிட்டு செல்கிறார்.
மீனாவின் சர்ஜரி ஒரு பக்கம், மனோஜ் ரோகினி பிரச்சனையை ஒரு பக்கம் என மீண்டும் சிறகடிக்க அடிக்க ஆசை சீரியல் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது.
