மீண்டும் வில்லத்தனத்தை ஸ்டார்ட் பண்ண ரோகிணி… பதற்றத்தில் விஜயா!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மீனாவின் கர்ப்ப பை பிரச்சனையால் அவருக்கு ஆபிரேஷன் செய்வது என முத்து முடிவு செய்கிறார். அதற்காக உதவிகள் வேண்டுதல் என தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் மீனா கோயில் செல்லும் போது ஒரு கணவன் குறித்து அங்கிருப்பவர்கள் பேசிக்கொள்கின்றனர்.
பொண்டாட்டிக்காக இந்த பையன் எவ்வளோ செய்றான் பாரு என அவர்கள் பெருமையாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் சரியாக அங்க பிரதட்சனம் செய்து வருகிறார் முத்து. இதை பார்க்கும் மீனா அதிர்ச்சி அடைகிறார். முத்து தன் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து அவர் பெருமையாக பேசி சந்தோஷப்படுகிறார்.
வீட்டில் இருப்பவர்களிடம் முக்கியமான வேலை எனக் கூறிவிட்டு மருத்துவமனைக்கு மீனாவை அழைத்து செல்கிறார் முத்து. அங்கு அவரை ஆபிரேஷனுக்காக தயார் செய்து அழைத்து செல்கின்றனர். முத்துவிடம் பயமாக இருப்பதாக சொல்கிறார் மீனா.
பின்னர் மீனாவை ஆபிரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் சில நிமிடங்களில் அங்கு பரபரப்பாகிறது. என்னவென்று கேட்க மீனாவுக்கு பேனிக் அட்டாக் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் இந்த ஆபிரேஷன் கொஞ்சம் ரிஸ்கியாகி விட்டதாக சொல்கிறார்கள்.
பயத்தில் முத்து கண்ணீர் விட சீதா அவரை சமாதானம் செய்கிறார். இதை அந்த ஹாஸ்பிட்டலுக்கு செக்கப் வரும் ரோகிணி பார்த்து விடுகிறார். பின்னர் நர்ஸிடம் சொல்ல மீனாவின் கர்ப்பப்பை பிரச்சனை என்பதை தெரிந்து கொள்கிறார். இதனால் குஷியாகி விஜயாவுக்கு கால் செய்து சொல்கிறார்.
உங்க வீட்டுக்கு என் பிள்ளை தான் முத பேரக்குழந்தை. என திமிராகவே பேசுகிறார். மீனாவுக்கு வயித்தில் குத்தி குத்து பட்டதால் கருப்பை பிரச்சனையாகி விட்டது. இப்போ சர்ஜரி நடக்கிறது. ஸ்ருதி பத்தி கேட்கவே வேண்டாம் என்கிறார். எம்மா ரொம்ப ஆடாத உன் புருஷன் பிரச்சனை தெரிந்தா ஆப்புதான் உனக்கு.
