Siragadikka Aasai: மனோஜுக்கு விழுந்த தர்ம அடி… பிஏ பிரச்னையை முடிச்சிவிட்ட ரோகிணி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜை ஸ்ருதி மற்றும் மீனா அடித்து துவைத்து கொண்டு இருக்கின்றனர். அப்போ விஜயா வர திருடன் எனக் கூற அவரும் அடிக்கிறார். பின்னர் ரோகிணி வர பிஏ தான் மாட்டிக்கிட்டான் என்ற நம்பிக்கையில் அவரும் போட்டு வெளுக்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டிற்குள் முத்து வர அவரை அடிக்க சொல்கிறார். ஆனால் சத்தத்தை கேட்ட விஜயா பதறி நிறுத்தி மாஸ்க்கை எடுக்க அது மனோஜ் என தெரிகிறது. எதுக்காக நீ இங்க இருக்க திருடவும் ஆரம்பிச்சிட்டீயா என்கிறார் முத்து.
ஒரு திருடன் வந்தான். அவன் தான் என்மேலயும் மாஸ்க்கை போட்டுட்டான் என்கிறார் மனோஜ். நாங்களும் இரண்டும் திருடன் வந்ததா நினைச்சு அடிச்சோம் என்கிறார் மீனா. பின்னர் அண்ணாமலை நகையை பத்திரமா கொண்டு போய் பீரோவில் வச்சு பூட்டிடு என்கிறார்.
மனோஜ் வலியால் முனக அவருக்கு விஜயா ஒத்தரம் கொடுக்கிறார். அந்த நேரத்தில் சிட்டி பிஏவை திட்டிக்கொண்டு இருக்கிறார். இதுக்கு தான் சொன்னேன். நான் செய்றேனு இப்போ அந்த ரோகிணியை மிரட்டி வை என அவருக்கு போன் பண்ண சொல்கிறார்.
பிஏ ரோகிணிக்கு கால் செய்து என்ன மாட்டிவிட பாக்குறீயா எனக் கூற நான் உனக்கு சான்ஸ் கொடுத்தேன். நீ அதை கெடுத்துட்டா நான் என்ன செய்றது என்கிறார். இப்போ எனக்கு பணம் வேணும் என அவர் கேட்க என்னிடம் இப்போ இல்ல. கொஞ்சம் டைம் வேணும் எனக் கேட்கிறார்.
அதெல்லாம் முடியாது. நான் முத்துக்கு கால் பண்ணி சொல்லவா என பிஏ கேட்க சரி சொல்லு. நீ சொல்லாம இருக்கவரை தான் அது ரகசியம். சொல்லிட்டா நானும் உனக்கு பயப்பட வேண்டியது இல்ல. காசும் கொடுக்க அவசியம் இல்ல எனக் கூறி போனை வைக்கிறார்.

சிட்டி அவ சொல்றது சரிதான். நீ சொல்லிட்டா அவ நிம்மதியா ஆகிடுவா. இப்போ கொஞ்ச நாள் சும்மா இரு. அவளை மறுபடி மிரட்டுனா பயமே இருக்காது என்கிறார். சீதாவின் கல்யாண நாளும் வருகிறது. முத்து மற்றும் மீனா பரபரப்பாக வேலை செய்கின்றனர்.
சீதாவுக்கு ரோகிணி மேக்கப் போட்டுவிட்டு வெளியில் மனோஜுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். மனோஜ் பாத்தியா, இவன் ரெளடி அவன் போலீஸ் என்கிறார். ரோகிணி இனிமே முத்துக்கு இந்த வீட்டில மரியாதை இருக்காது எனக் கூறி சிரித்து கொண்டு இருக்கிறார்.
சீதா மீனாவிடம் இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை சொல்லிடலாமா எனப் பேசிக் கொண்டு இருக்கிறார். மனோஜ் சாப்பிட சென்ற இடத்தில் சண்டை போட்டு கொண்டு இருக்க அப்போ அங்கு வரும் முத்து அவரை திட்டி அமைதிப்படுத்துகிறார்.