விஜயாவின் சகுனி வேலை… சத்யா கல்யாணத்தை நிறுத்துவாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோட் சத்யா மற்றும் ரேகா இருவரின் கல்யாண களமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

ரேகாவை அலங்கரித்துவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ருதி தன்னுடைய கல்யாணத்திற்கு சீதா தான் உதவி செஞ்சாங்க. சீதா தன்னுடைய கல்யாணத்திற்கு அக்கா மீனாதான் உதவியதாக ரேகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் போது அங்கு விஜயா இருந்தால் எப்படி அமைதியாக செல்லும். தன்னை அவமானப்படுத்திய சிந்தாமணியை பழிவாங்க கொடூரமாக ஒரு எண்ணத்தை சிந்திக்கிறார். அந்த வகையில் திருமணம் நடக்க வேண்டும் அதை சிந்தாமணி பார்க்க வேண்டும் என பிளான் பண்ணுகிறார்.

இதற்காக வீட்டை வீடியோ எடுத்து அதை சிந்தாமணிக்கு அனுப்புகிறார். பின்னர் அவருக்கு கால் செய்து என்ன விசேஷமா இருக்குனு இங்க வந்தா உன் பொண்ணுக்கு இங்க கல்யாணம் நடக்குது எனக் கூறி தன்னுடைய மாமியார் வீட்டு அட்ரெஸையும் தந்துவிடுகிறார்.

இதை பார்வதியிடம் விஜயா சொல்லி தன்னுடைய வில்லத்தனத்தால் அவரை மிரள விடுகிறார். இந்த விவரம் தெரிந்த சிந்தாமணி உடனே ரேகாவிற்கு கால் செய்ய ஆனால் அவர் எடுக்காமல் தயங்கிக் கொண்டிருக்கிறார்.

 ஒரு கட்டத்தில் எடுத்துப் பேசலாம் என முடிவெடுத்து போனை எடுக்கும்போது விஜயா வந்து தடுத்து விடுகிறார். கல்யாணம் முடிந்தவுடன் பேசிக்கொள் என அவரை நைசாக பேசி சமாதானம் செய்கிறார்.

 சிந்தாமணி தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு பரபரப்பாக பாட்டியின் ஊருக்கு கிளம்புகிறார். மணமேடையில் சத்யா மற்றும் ரேகா மறந்துவிட சிந்தாமணி இந்த கல்யாணத்தை நிறுத்துவாரா கல்யாணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

From Around the web