சீதாவிற்காக முத்து செய்த விஷயம்… இனிமே அருணுக்கு பிரச்சனைதான்!
சீதாவின் பிரச்சனை, ரோகிணி கர்ப்பம் என சிறகடிக்க ஆசை மீண்டும் மீண்டும் களைக்கட்ட தொடங்கி இருக்கிறது.
மனோஜின் பேச்சை கேட்டு ரோகிணியின் வயிற்றில் வரும் குழந்தை அவருடையது இல்லை என நம்பிவந்தார் விஜயா. ஆனால் ரோகிணியின் குணத்தை சொல்லி அந்த குழந்தை மனோஜுடையது தான் என புரிய வைக்கிறார் பார்வதி.
அவர் சொல்ல சொல்ல பார்வதியின் பேச்சில் நம்பி மனோஜுன் குழந்தை தான் என நம்புகிறார் விஜயா. ஆனால் அந்த குழந்தையை ஏத்துக்கொள்ள மனம் இல்லாமல் கலைக்க முடிவெடுக்கிறார். சாப்பாடுல எதுவும் கலந்து கொடுக்கலாம் என்கிறார்.
இதில் கடுப்பாகும் பார்வதி நீ என் ப்ரண்டுங்கிறதால அமைதியா இருக்கேன். இப்படி ஒரு பாவத்துக்கு நான் துணை நிக்கவே மாட்டேன். நீயெல்லாம் என்ன மனுஷி எனத் திட்டிவிட்டு செல்கிறார். ஆனால் விஜயா அவர் முடிவில் தெளிவாக இருக்கிறார்.
சீதா தற்போது அம்மா வீட்டில் இருக்கிறார். அருண் அவரை அடிப்பதால் தற்காத்து கொள்ள கராத்தே கிளாஸில் சேர்த்துவிடுகிறார். பின்னர் ரோகிணி டாக்டர் செக்கப் முடித்துவிட்டு சந்தோஷமாக மனோஜை பார்க்க வருகிறார்.
எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்து உண்மையை சொல்ல மனோஜ் ஷாக்காகி விடுகிறார். இனிமே நம்மளை யாரும் பிரிக்க முடியாது. குழந்தை ஹெல்த்தியா இருக்கு. ஆனா உங்க அம்மா தான் எனக்கு ஸ்ட்ரெஸை தராங்க எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.
மீனாவின் ஆபரேஷன் நல்லா நடக்க வேண்டும் என்பதற்காக முத்து அன்னதானம் செய்கிறார். அடுத்த சில நாட்களில் கர்ப்பகாலம் ஸ்டார்ட் ஆகும் போல. ஒரே பரபரப்பா இருக்கும் சிறகடிக்க ஆசை மீண்டும் டாப் ஸ்பாட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
