அரெஸ்ட்டான சத்யா… பதட்டத்தில் மீனா குடும்பம்… அசால்ட்டாக இருக்கும் முத்து!...

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்தக்கட்ட பரபரப்பு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. 
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் தற்போது ரேகா மற்றும் சத்யா காதல் கதை விவகாரம் சிந்தாமணிக்கு தெரிந்து சர்ச்சையாகி இருக்கிறது. 

ஏற்கனவே ரேகாவுடனான காதல் வேண்டாம் என மீனா சொல்லிக்கொண்டே இருந்தும் அதை முத்து கேட்கவில்லை. சத்யாவை சிந்தாமணி கணவரிடம் பேச சொல்லி இருந்தார். அவர் தற்போது சிந்தாமணி பெயரில் ரேகாவை ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். 

ஆனால் வெளியில் விடாமல் வீட்டுக்குள் வைத்துவிட்டு சத்யா மீது கடத்தல் வழக்கு கொடுக்கிறார். இதனால் போலீஸ் அவரை அரெஸ்ட் செய்து வந்து அடித்துக்கொண்டு இருக்கின்றனர். சீதாவும் அவர் அம்மாவும் அழுதுக்கொண்டு இருக்கின்றனர். 

சீதா அருணிடம் உதவி கேட்க முத்து மேல் இருந்த கடுப்பால் அவன் சேர்க்கை சரியில்லை. அதனால் அவன் பண்ணி இருக்கலாம் எனத் திட்டிவிடுகிறார். அவர் அழுது கேட்டு கூட என் வேலைக்கு பிரச்சனை வரலாம் எனக் கூறி உதவி செய்யாமல் விடுகிறார். 

அப்போது முத்து வந்து போலீஸிடம் கேட்க ரேகா காணும் அவங்க வீட்டில் புகார் கொடுத்து இருப்பதாகவே சொல்கின்றனர். இது சிந்தாமணியின் வேலையாக தான் இருக்கும் என்கிறார். இதனால் ரேகாவை தேடி முத்து மீனா செல்கின்றனர். 

ரேகா அப்பா வீட்டின் முன் வேலைக்காரியிடம் பொறுமையாக பேசி ரேகா அந்த வீட்டிற்குள் தான் இருக்கிறார் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இனி அவரை முத்து எப்படி மீட்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

From Around the web