திமிரா பேசிய விஜயா… பதிலடி கொடுத்த மீனா… அடுத்த நடந்தது தான் ட்விஸ்ட்டே!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
சத்யாவை வெளியில் அழைத்து வருகின்றனர். மீனா அருணிடம் நீங்க ஒரு போலீஸா இல்ல. சொந்த குடும்பமா கூட காப்பாத்த தோணலையே என்கிறார். நான் என்ன செய்ய முடியும். நான் டிராபிக் போலீஸ் தானே என அசால்ட்டாக பேசுகிறார்.
வீட்டிற்கு வரும் மீனா மற்றும் முத்து இருவரும் சத்யா குறித்து சொல்கின்றனர். அவன் என் வீட்டிலே திருடினான். அவன் எதும் செஞ்சி இருப்பான் எனக் கூற அதெல்லாம் இல்ல இப்போ அவன் நல்லா இருக்கான். அந்த சிந்தாமணி பொண்ணு தான் ரேகா என்கிறார்.
இதை கேட்டு ஷாக்காகி பின்னர் சிரிக்கிறார் விஜயா. அய்யோ நான் தீர்க்கதரிசியாகி விட்டேன் என்கிறார். என்னவென கேட்க நம்மை ஏமாத்தினப்போ அவ பொண்ணை ஒன்னும் இல்லாதவன் கூட ஓடி போவானு நான் தான் சொன்னேன் என்கிறார்.
அதில் ஓவர் குஷியாகி பேச கடுப்பான மீனா சத்தம் போடுகிறார். எப்போ பாத்தாலும் எங்க குடும்பத்தை ஏன் அசிங்கப்படுத்திட்டே இருக்கீங்க எனக் கடுப்படிக்கிறார். நீ வீட்டை காப்பாத்தி கொடுத்தாலும் அந்த சிதாமணி எனக்கு செஞ்சதுக்கு இப்போ நல்லா அனுபவிக்கிறா என்கிறார்.
பின்னர், வித்யா ரோகிணி வீட்டுக்கு வருகிறார். அவர் அம்மா ரோகிணி வெளியில் வருவதே இல்லை. நீ என்னவென கேளு எனக் கூற அவ என்கிட்ட பேசுறதே இல்ல. இருந்தாலும் நான் பேசி பாக்குறேன் என்கிறார்.
வித்யா ரோகிணியிடம் பேசப்போக அவர் கதறி அழுகிறார். விஜயா ஆண்ட்டி என்ன பேசுனாங்க தெரியுமா? இப்போ வீட்டை மீட்டாங்க எல்லாரையும் கூப்டாங்க. என்னை கூப்பிடவே இல்லை என்கிறார். நானும் போனேன் என்கிறார் வித்யா.
நீ கஷ்டத்துல தான் இருக்க இருந்தாலும் சொல்றேன். நீ மனோஜுக்கு விவாகரத்து கொடுத்துட்டு கிரிஷை பாரு என்கிறார். ரோகிணி அம்மாவும் அதையே சொல்ல கிரிஷை பார்த்துக்கொண்டே ரோகிணி யோசிக்கிறார். அடுத்த வாரம் மேலும் பரபரப்பு இருக்கும் என நம்பலாம்.
